NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பங்களாதேஷில் இருந்து தப்பித்த பிரதமர் ஷேக் ஹசீனா ஏன் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பங்களாதேஷில் இருந்து தப்பித்த பிரதமர் ஷேக் ஹசீனா ஏன் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார்
    இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவு உள்ளது

    பங்களாதேஷில் இருந்து தப்பித்த பிரதமர் ஷேக் ஹசீனா ஏன் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 05, 2024
    06:46 pm

    செய்தி முன்னோட்டம்

    பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 15-ஆண்டுகால ஆட்சி, ஆகஸ்ட் 5 திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது.

    அவர் பல வாரங்கள் நீடித்த தொடர் போராட்டங்களில் இருந்து தப்பி ஓடியதால், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாக பங்களாதேஷின் இராணுவம் அறிவித்தது.

    சி-130 போக்குவரத்து விமானத்தில் உத்திரபிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் ஷேக் ஹசீனா தரையிறங்கியதாக பெயர் வெளியிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.

    இந்த விமானம் இந்திய விமானப்படையின் சி-17 மற்றும் சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமான ஹேங்கர்களுக்கு அருகில் நிறுத்தப்படும்.

    இந்திய வான்வெளியில் நுழைவதிலிருந்து காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளம் வரை விமானத்தின் இயக்கம் இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களால் கண்காணிக்கப்பட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    காரணம்

    ஷேக் ஹசீனா ஏன் இந்தியாவில் இறங்கினார்?

    பல ஆண்டுகளாக, ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஒரு முக்கிய ஆதரவாளராக இருந்து வருகிறது, இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவை வளர்த்து வருகிறது.

    பங்களாதேஷ், இந்தியாவின் பல வடகிழக்கு மாநிலங்களுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.

    ஷேக் ஹசீனா தனது பதவிக் காலத்தில், வங்காளதேசத்தில் உள்ள இந்திய-எதிர்ப்பு போராளிக் குழுக்களை ஒடுக்கியதாகவும் அதனால், டெல்லியில் நல்லெண்ணத்தைப் பெற்றதாகவும், பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்திய நிலப்பரப்பில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கு வசதியாக, இந்திய போக்குவரத்து உரிமைகளையும் அவர் வழங்கினார்.

    ஷேக் ஹசீனா, 1996ஆம் ஆண்டு முதல்முதலாக தேர்தலில் வென்றதிலிருந்து இந்தியாவுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகிறார். டெல்லியுடனான டாக்காவின் வலுவான உறவை தொடர்ந்து பாதுகாத்து வருகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    இந்தியா

    சமீபத்திய

    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு

    பங்களாதேஷ்

    மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம்  உலகம்
    பங்களாதேஷில் சுற்றுலா செல்லும்போது, இந்த தவறுகளைத் தவிர்க்கவும் சுற்றுலா
    ஆசிய கோப்பை BANvsPAK : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு ஆசிய கோப்பை
    BANvsPAK: பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் 200 ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம்  ஆசிய கோப்பை

    இந்தியா

    ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் குறைந்தது: தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது பெரும்பான்மைக்கு கீழே உள்ளது மாநிலங்களவை
    நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.சர்மா ஒலி: பிரதமர் மோடி வாழ்த்து  நேபாளம்
    ஜம்மு காஷ்மீரின் தோடாவில் என்கவுன்டர் நடவடிக்கை: 4 இராணுவ வீரர்கள் பலி  ஜம்மு காஷ்மீர்
    கேமலின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் காலமானார் மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025