
இளவரசர் ஹாரி- மனைவி மேகன் மார்க்கெல் உறவில் விரிசலா? சொந்த நாட்டிற்கு திரும்ப திட்டம் என அறிக்கை
செய்தி முன்னோட்டம்
இளவரசர் ஹாரி தனது சொந்த நாடான இங்கிலாந்தையும், அங்கிருக்கும் உறவுகளையும் மிஸ் செய்வதாகவும், அவரது மனைவி மேகன் மார்க்கெலை அவரின் நண்பர்கள் விரும்பாததால், அவர்களும் இவரிடம் இருந்து ஒதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இளவரசர் ஹாரியை காண அவரது நண்பர்கள் வருகை தராத காரணத்தால் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறார் என்று அரச குடும்பத்திற்கு நெருக்கமான டாம் க்வின் என்பவர், சனிக்கிழமை தி மிரரிடம் தெரிவித்தார்.
தற்போது இளவரசர் ஹாரி, கலிபோர்னியாவின் மான்டெசிட்டோவில், மனைவி மேகன் மற்றும் அவர்களது குழந்தைகளான இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லிலிபெட் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
நண்பர் திருமணம்
நண்பரின் திருமணத்தை தவற விட்ட ஹாரி
ஹாரியின் பால்ய வயது நண்பர்களில் ஒருவரும், ஆர்ச்சியின் காட்பாதரும் ஆன ஹக் க்ரோஸ்வெனர் என்பவருக்கு கடந்த மாதம் இங்கிலாந்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஹாரி மற்றும் மேகன் கலந்து கொள்ளவில்லை. "அனைவருக்கும் இடையூறு விளைவிப்பதை" தவிர்ப்பதற்காக ஸ்ஸ்ஸ்ஸ் குடும்பம்- இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன், இந்த கொண்டாட்டங்களைத் தவிர்த்துவிட்டதாக ஒரு அரச நிபுணர் கூறினார்.
ஹாரி கடைசியாக மே மாதம் இன்விக்டஸ் கேம்ஸின் 10வது ஆண்டு விழாவிற்காக இங்கிலாந்து சென்றார்.
எனினும் ஹாரி தனது நண்பர்களைப் பார்க்கத் திட்டமிடவில்லை என்றும், அவ்வாறு பார்த்தால் தன்னுடைய திருமணத்திற்கு முந்தைய வழக்கை நினைவிற்கு வந்துவிடும் என ஹாரி அஞ்சுவதாகவும், அதை அவர் தவிர்க்க விரும்புகிறார் என அரச குடுமபத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
இங்கிலாந்து
இங்கிலாந்தில் புதிய வசிப்பிடத்தை தேடும் ஹாரி
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹாரி தனது பிரிட்டிஷ் வசிப்பிடத்தைத் துறந்து, அமெரிக்காவை தனது அதிகாரபூர்வமான இடமாக அறிவித்தார்.
இந்த முடிவு ஜூன் 29, 2023 அன்று எடுக்கப்பட்டது. இந்த நாளில் தான் ஹாரியும், மேகனும் அதிகாரப்பூர்வமாக ஃபிராக்மோர் அரண்மனையை காலி செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அவர்கள் இங்கிலாந்தில் வசிக்க இடமில்லாமல் போனது.
இருப்பினும், ஹாரி இங்கிலாந்தில் வசிக்க புதிய இடத்தைத் தேடுவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசர் சார்லஸின் முன்னாள் சமையல்காரர், கிராண்ட் ஹரோல்ட், தி போஸ்ட்டிடம், ஹாரி தனது சொந்த நாட்டில் உள்ள சொத்துக்களை பரிசீலித்து வருவதாகக் கூறினார்.