LOADING...
"அதிக வரிகள் குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இல்லை": ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்
இந்தியா ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து அதிருப்தி வெளியிட்டார்

"அதிக வரிகள் குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இல்லை": ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 07, 2026
09:38 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது நட்பு மற்றும் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறித்து முக்கியமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "பிரதமர் மோடியுடன் எனக்கு மிகச் சிறந்த உறவு உள்ளது. அவர் ஒரு அற்புதமான மனிதர் மற்றும் எனது நல்ல நண்பர்" என்று புகழாரம் சூட்டினார். அதே சமயம், இந்தியா ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து அதிருப்தி வெளியிட்டார். "பிரதமர் மோடியுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது, ஆனால் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியா அதிக வரிகளை செலுத்துவது குறித்து அவர் என் மீது மகிழ்ச்சியடையவில்லை" என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

வரி விதிப்பு

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது தொடர்ந்தால் அதிக வரி விதிப்பு எச்சரிக்கை

இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்தியத் தயாரிப்புகள் மீது மிக விரைவில் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் நேற்று எச்சரித்த நிலையில் இன்று இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். நேற்று,"அவர்கள் வர்த்தகம் செய்கிறார்கள், நாங்களும் மிக விரைவாக வரிகளை விதிக்க முடியும்" என்று அவர் கூறினார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராத வரிகள் தொடரும் என்பதையும் அவர் சூசகமாக உணர்த்தியுள்ளார். டிரம்பின் இந்த எச்சரிக்கை இருநாட்டு உறவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "அவர்கள் என்னை சந்தோஷப்படுத்த விரும்பினர், அடிப்படையில். பிரதமர் மோடி மிகவும் நல்ல மனிதர். அவர் ஒரு நல்ல மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை சந்தோஷப்படுத்துவது முக்கியம்," என கூறியிருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement