
2024ஆம் ஆண்டு ரஷ்ய தேர்தலில் அதிபர் புதினை எதிரித்து போட்டியிட ஆளில்லையா?
செய்தி முன்னோட்டம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால் அவருடன் யாரும் போட்டியிட முடியாது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
"ஆனால் அவர் வேட்புமனு தாக்கல் குறித்து இன்னும் அறிவிக்கவில்லை," என்றும் டிமிட்ரி கூறியுள்ளார்.
மேலும், "அவர் வேட்பாளராக நிற்கிறார் என்றால், தற்போதைய கட்டத்தில் அவருக்கு உண்மையான போட்டியாக யாராலும் இருக்க முடியாது என்பது வெளிப்படையானது" என்று கூறிய டிமிட்ரி பெஸ்கோவ், விளாடிமிர் புடின் மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
ட்ஜ்வ்க்ன்
விளாடிமிர் புதினுக்கு அதிகமாக அழுத்தம் கொடுக்கும் மேற்கத்திய நாடுகள்
முன்னாள் கேஜிபி ஏஜென்ட்டான விளாடிமிர் புதின் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ரஷ்யாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.
ஆனால், கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது அவரது ஆட்சியின் மிகப்பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இதனால், ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகள் அதிக அழுத்தம் கொடுத்து வருகின்றன.
1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு இந்த அளவுக்கு அழுத்தம் கொடுப்பது இதுவே முதல்முறையாகும்.
டொய்ஜ்வ்
விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு நேர்ந்த மிகப்பெரிய சவால்கள்
இதற்கிடையில், உக்ரைன் போரும் ரஷ்ய அரசாங்கம் கணித்தது போல் சுலபமாக இருக்கவில்லை.
போர் தொடுத்த சில மாதங்களிலேயே உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடைந்துவிடும் என்று ரஷ்யா எதிர்பார்த்தது.
ஆனால், மேற்கத்திய நாடுகளின் துணையுடன் உக்ரைன் ஒரு வருடத்திற்கும் மேலாக ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.
இதற்கிடையில், ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிரான வாக்னர் கூலிப்படையின் உள்நாட்டு கிளர்ச்சியும் விளாடிமிர் புதினை கடுமையாக சோதித்துவிட்டது.
கேணல்
ரஷ்யாவின் மிகவும் பிரபலமான அரசியல்வாதி விளாடிமிர் புதின்
ரஷ்ய படையெடுப்பினால், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் $2.1 டிரில்லியன் பொருளாதாரத்தின் மீது இதுவரை கண்டிராத கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
ஆனால், விளாடிமிர் புதின் இன்றுவரை ரஷ்யாவில் மிகவும் பிரபலமான அரசியல்வாதியாகத் திகழ்வதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் புதினுடன் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதினுக்கு ரஷ்யர்கள் ஆதரவளிப்பார்கள் என்று நம்புவதாகக் கூறினார்.
ஒதுக்கீ
70% ரஷ்யர்கள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை ஆதரிக்கிறார்களா?
கருத்து கணிப்புகளின் படி, 80% ரஷ்யர்கள் புதினுக்கு ஆதரவளிப்பதாக கூறப்படுகிறது. இந்த சதவீதம் உக்ரைன் போருக்கு முன்பு இருந்ததை விட அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 70% ரஷ்யர்கள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை ஆதரிப்பதாகவும் ரஷ்ய கருத்து கணிப்புகள் காட்டுகின்றன.
ஆனால், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்களும் மேற்கத்திய இராஜதந்திரிகளும் அத்தகைய கருத்துக் கணிப்புகளை நம்ப முடியாது என்று கூறுகின்றனர்.