போப் லியோ XIV-க்கு நுரையீரல் புற்றுநோய்: ரோமில் 90 நிமிட அறுவை சிகிச்சை வெற்றி
செய்தி முன்னோட்டம்
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான 71 வயதான போப் லியோ XIV-க்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் மருத்துவ அறிக்கையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. முதன்மை மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ஸ்டெபானோ மார்கரிட்டோரா தலைமையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. 'வீடியோ உதவியுடனான' நவீன தொழில்நுட்பம் மூலம் புற்றுநோய் செல்களை முழுமையாக அகற்றும் நோக்கில் இந்த சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட திசுப் பரிசோதனையில் அவருக்கு 'நுரையீரல் அடினோகார்சினோமா' இருப்பது உறுதியானது. அறுவை சிகிச்சைக்குப் பின் போப் இயல்பாக விழித்துக் கொண்டார் என்றும், எந்தவித சிக்கல்களும் இன்றி ஓய்வெடுத்து வருவதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது.
சிகிச்சை
நிகழ்வுகள் அக்டோபர் 20 வரை ரத்து
மருத்துவமனையில் சுமார் ஒரு வாரம் வரை தங்கி போப் லியோ சிகிச்சைப் பெறவுள்ளதால், அக்டோபர் 20-ஆம் தேதி வரையிலான அவரது அனைத்து பொது நிகழ்வுகளும், சந்திப்புகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
2025 மே மாதம் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் லியோ, புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர் மற்றும் விளையாட்டு ஆர்வலர் ஆவார்.
அவருக்கு நுரையீரல் கட்டியை தொடக்க நிலையிலேயே மருத்துவர்கள் கண்டறிந்து அகற்றியுள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள 1.4 பில்லியன் கத்தோலிக்க மக்கள் அவரது விரைவான குணமடைதலுக்காக பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.