Loading...
கோயில் பக்தர்களுக்கு செம குட் நியூஸ்! செல்போன் தடை முழுமையாக நீக்கம்; புதிய விதிகள் என்ன?
தமிழக கோயில்களுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

கோயில் பக்தர்களுக்கு செம குட் நியூஸ்! செல்போன் தடை முழுமையாக நீக்கம்; புதிய விதிகள் என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 13, 2026
03:56 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் முக்கியக் கோயில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனி பக்தர்கள் கோயில்களுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பெரிய கோயில்களுக்குள் செல்போன்கள் எடுத்துச் செல்ல முழுமையான தடை விதிக்கப்பட்டு, நுழைவு வாயில்களில் லாக்கர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்து சமய அறநிலையத்துறை புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள்

செல்போன் தடை நீக்கம் மற்றும் புதிய கட்டுப்பாடுகள்

பக்தர்கள் தங்களது மொபைலை கட்டாயமாக சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் மட்டுமே கோயிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

கோயிலின் புனிதத்தன்மையைக் காக்கும் பொருட்டு, வளாகத்திற்குள் இருக்கும் வரை செல்போன் அணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

சிலைகள், சன்னதிகள் மற்றும் பூஜைகளை புகைப்படம் எடுப்பது, வீடியோ மற்றும் செல்ஃபி எடுப்பதற்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும்.

இந்த விதிகளை மீறி ரகசியமாகப் புகைப்படம் அல்லது சமூக வலைதளப் பதிவுகளுக்காக வீடியோ எடுப்பவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீதும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் நீண்ட வரிசைக் காத்திருப்பு மற்றும் அவசரத் தேவைகளைக் கருத்தில்கொண்டு அறநிலையத்துறை இந்தச் தளர்வை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT