Loading...
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கு: ராகுல் காந்தி மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்
ராகுல் காந்தி மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கு: ராகுல் காந்தி மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 13, 2026
04:35 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடியைக் குறிப்பிட்ட சில வார்த்தைகளால் விமர்சித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பம்பாய் உயர் நீதிமன்றத்தின் செப்டம்பர் 8-ஆம் தேதி உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரேஷ் குமார் சிங்* அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

விசாரணை

உச்ச நீதிமன்ற விசாரணை

விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் நடவடிக்கைகளுக்கு தடை விதித்த நீதிபதிகள், மனு தொடர்பாக மகாராஷ்டிர அரசு மற்றும் வழக்கைத் தொடர்ந்த பாஜக உறுப்பினர் மகேஷ் ஸ்ரீஸ்ரீமால் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.

ராகுல் காந்தியின் பேச்சில் எந்தவொரு குறிப்பிட்ட கட்சியோ அல்லது அடையாளம் காணக்கூடிய அமைப்போ நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றும், அதனால் மூன்றாம் நபர் தொடர்ந்த இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் வாதிட்டார்.

பின்னணி

வழக்கின் பின்னணி மற்றும் பம்பாய் உயர் நீதிமன்றத் தீர்ப்பு

கடந்த 2018-ஆம் ஆண்டு ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாகப் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் பேசியதாகக் கூறி பாஜக தொண்டர் மகேஷ் ஸ்ரீஸ்ரீமால் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்ய மறுத்த பம்பாய் உயர் நீதிமன்றம், பாஜக என்பது பதிவு செய்யப்பட்ட தேசியக் கட்சி என்பதால் அதன் தொண்டர் வழக்குத் தொடர முடியும் எனக் கூறி ராகுல் காந்தியின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டதால் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய சட்டப் பாதுகாப்பு கிடைத்துள்ளது.

ADVERTISEMENT