Page Loader
மோசமடைந்த போப் பிரான்சிஸ் உடல்நிலை, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது
மோசமடைந்த போப் பிரான்சிஸ் உடல்நிலை

மோசமடைந்த போப் பிரான்சிஸ் உடல்நிலை, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 01, 2025
09:10 am

செய்தி முன்னோட்டம்

போப் பிரான்சிஸுக்கு வெள்ளிக்கிழமை உடல்நலன் மோசமடைந்ததாகவும், அதனால் அவருக்கு செயற்கை சுவாசம் தேவைப்பட்டது என்றும் வாடிகன் தெரிவித்துள்ளது. போப் ஆண்டவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், 88 வயதான போப் எல்லா நேரங்களிலும் விழிப்புடன் சிகிச்சைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் வாடிகன் திருச்சபை தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் அவருக்கு சுவாசம் திடீரென மோசமடைய செயற்கை சுவாசம் பொறுத்தவேண்டி இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மருத்துவர்கள், அவருடைய ஒட்டுமொத்த மருத்துவ நிலையை மதிப்பிடுவதற்கு 24 முதல் 48 மணிநேரம் தேவை என்று தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பிரார்த்தனைகள்

உலகெங்கும் தொடரும் பிரார்த்தனைகள்

இளம் வயதிலேயே ஒரு நுரையீரலின் ஒரு பகுதியை அகற்றிய போப்பிற்கு ஏற்கனவே நுரையீரல் நோய் உள்ளது. தற்போது மேலும் மூச்சுக்குழாய் அழற்சி மோசமடைந்து இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியாவாக மாறிய பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை மோசமடைந்ததைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை இரவு, போப் பிரான்சிஸின் நெருங்கிய நண்பரான அர்ஜென்டினா கார்டினல் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ், பிரான்சிஸின் உடல்நலத்திற்காக செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இரவு பிரார்த்தனையை நடத்தினார். மெக்ஸிகோ நகரில், பிரான்சிஸின் மீட்புக்காக பிரார்த்தனை செய்ய வியாழக்கிழமை இரவு சில டஜன் மக்கள் கதீட்ரலில் கூடினர்.