இங்கிலாந்தில் வில்-அம்பை கொண்டு 3 பெண்களை கொன்ற நபருக்கு போலீசார் வலை வீச்சு
ஜூலை 10 ஆம் தேதி லண்டனுக்கு அருகே ஒரு வீட்டில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டதை அடுத்து, வில்-அம்பு ஆயுதம் ஏந்தியதாக நம்பப்படும் ஒரு நபரை பிரிட்டிஷ் போலீசார் தேடி வருகின்றனர். 26 வயதான கைல் கிளிஃபோர்ட் தான் இந்த கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் நம்புவதாக ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் காவல்துறை தெரிவித்துள்ளது. பலியானவர்கள் பிபிசி 5 லைவ்வின் பந்தய வர்ணனையாளரான ஜான் ஹன்ட்டின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் என்று டெலிகிராப் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை புஷேயில் உள்ள ஜான் ஹன்ட்டின் வீட்டில் மூன்று பெண்கள் பலத்த காயம் அடைந்ததை அடுத்து, காவல்துறை மற்றும் துணை மருத்துவர்கள் அழைக்கப்பட்டனர்.
3 பெண்களை கொன்ற நபருக்கு போலீசார் வலை வீச்சு
ஒரு குடுமபத்தை சேர்ந்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி
செவ்வாய்க்கிழமை மாலை ஜான் ஹன்ட் பிபிசியில் வேலை பார்த்து கொண்டிருந்ததால், அவர் இரவு 7 மணிக்கு வீடு திரும்பிய பிறகே சம்பவம் நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பிறகு, மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் 3 பெண்களையும் காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் என்ஃபீல்ட் பகுதியை சேர்ந்த கைல் கிளிஃபோர்ட் என்பவருக்கு ஹெர்ட்ஃபோர்ட்ஷைர் போலீசார் அவசர வாரண்டை வெளியிட்டுள்ளனர். முன்னாள் காவல்துறை அதிகாரியான ஜான் ஹன்ட்(58) கடந்த 20 ஆண்டுகளாக பிபிசி ரேடியோ 5 லைவ்வில் பணியாற்றி வருகிறார். இது திட்டமிடப்பட்ட கொலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.