Loading...
74 ஆண்டுகளுக்குப் பிறகு உலக வங்கி, ஐஎம்எஃப் அமைப்புகளின் தலைவராகிறது பாகிஸ்தான்
74 ஆண்டுகளுக்குப் பிறகு உலக வங்கி, ஐஎம்எஃப் அமைப்புகளின் தலைவராகிறது பாகிஸ்தான்

74 ஆண்டுகளுக்குப் பிறகு உலக வங்கி, ஐஎம்எஃப் அமைப்புகளின் தலைவராகிறது பாகிஸ்தான்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 17, 2026
07:17 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக வங்கி அமைப்புகளின் ஆளுநர் குழுவின் தலைவராக பாகிஸ்தான் 2027 ஆம் ஆண்டில் பொறுப்பேற்கவுள்ளது. 1953 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக பாகிஸ்தான் இந்த பதவியைப் பெறுகிறது. தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்ற 2026 உலக வங்கி - ஐஎம்எஃப் ஆண்டுக் கூட்டத்தில் பாகிஸ்தானின் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் அஹத் கான் சீமா புதிய தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகளாவிய பொருளாதார விவாதங்களில் பங்கேற்க இது ஒரு வரலாற்று மைல்கல் என பாகிஸ்தான் வர்ணித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானின் பின்னணி

சர்வதேச நிதி அமைப்புகளின் உயரிய தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் பெற்றிருந்தாலும், அந்நாடு தற்போதும் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

நாட்டின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சர்வதேச அமைப்புகளின் நிதியுதவியையே பாகிஸ்தான் முழுமையாக நம்பியுள்ளது.

தற்போது ஐஎம்எஃப் அமைப்பின் $7 பில்லியன் மதிப்பிலான நீட்டிக்கப்பட்ட நிதி வசதித் திட்டம் மற்றும் $1.4 பில்லியன் மதிப்பிலான மீள்தன்மை வசதித் திட்டம் ஆகியவற்றின் கீழ் பாகிஸ்தான் நிதியுதவிகளைப் பெற்று வருகிறது.

அந்நாட்டின் அந்நியச் செலவாணி கையிருப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

25 முறை கடன்கள்

25 முறை ஐஎம்எஃப் கடன்களைப் பெற்ற வரலாற்றுப் பதிவு

கடந்த 1950 ஆம் ஆண்டில் ஐஎம்எஃப் அமைப்பில் உறுப்பினராக இணைந்தது முதல் பாகிஸ்தான் இதுவரை 25 முறை கடன் திட்டங்களைப் பெற்றுள்ளது.

பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய வெளிநாட்டுச் செலாவணி பற்றாக்குறையை சமாளிக்கவே பாகிஸ்தான் இத்தகைய கடன்களைத் தொடர்ந்து பெற்று வருகிறது.

தற்போது நிலுவையில் உள்ள ஆய்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஐஎம்எஃப் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டு மேலும் $1.2 பில்லியன் கடனுதவியை பாகிஸ்தான் விரைவில் பெறவுள்ளது.

இந்த சூழலில் சர்வதேச அமைப்புகளின் தலைமைப் பொறுப்பு அந்நாட்டிற்கு கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

அதிகாரம்

ஆளுநர் குழுவின் அதிகாரங்களும் செயல்பாடுகளும்

உலக வங்கி மற்றும் ஐஎம்எஃப் அமைப்புகளின் மிக உயரிய கொள்கை முடிவு எடுக்கும் அமைப்பாக இந்த ஆளுநர் குழுக்கள் திகழ்கின்றன.

உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் அல்லது மத்திய வங்கி ஆளுநர்கள் இதில் பிரதிநிதிகளாக செயல்படுவர்.

பெரும்பாலான அன்றாட நிர்வாகப் பொறுப்புகள் நிர்வாக இயக்குநர்களிடம் வழங்கப்பட்டிருந்தாலும், ஆண்டுக் கூட்டங்களில் ஆளுநர் குழுவின் தலைவர் முக்கியப் பங்காற்றுவார்.

வரும் 2027 ஆம் ஆண்டிற்கான முழு ஆண்டு கூட்டக் காலத்திற்கும் பாகிஸ்தான் இந்த தலைமைப் பொறுப்பை வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT