Page Loader
பிரமோஸ் மூலம் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தது இந்தியா; ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல் வாக்குமூலம்
பிரமோஸ் மூலம் இந்தியா தாக்கியதை ஒப்புக்கொண்ட ஷெபாஸ் ஷெரீப்

பிரமோஸ் மூலம் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தது இந்தியா; ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல் வாக்குமூலம்

எழுதியவர் Sekar Chinnappan
May 29, 2025
06:54 pm

செய்தி முன்னோட்டம்

மே 9-10 இடைப்பட்ட இரவு இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவம் எதிர்பாராத விதமாக சிக்கி சின்னாபின்னமானதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டார். அஜர்பைஜானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஷேபாஸ் ஷெரீப், ராவல்பிண்டியில் உள்ள விமான நிலையம் உட்பட பல முக்கிய ராணுவ இடங்களை குறிவைத்து இந்தியா பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணைகளை ஏவியதாக தெரிவித்தார். மே 10 ஆம் தேதி அதிகாலை ஃபஜ்ர் (காலை) பிரார்த்தனைக்குப் பிறகு, தனது நாடு பதிலடி இராணுவ நடவடிக்கையைத் திட்டமிட்டிருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார். இருப்பினும், இந்தியாவின் முன்கூட்டிய தாக்குதல் அந்தத் திட்டங்களை சீர்குலைத்தது.

முதலில் தாக்குதல்

இந்திய படைகள் முதலில் தாக்குதல்

பதிலடி கொடுக்கும் முடிவு இறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் திட்டமிடப்பட்ட பதிலடி செயல்படுத்தப்படுவதற்கு முன்பே, இந்தியப் படைகள் முதலில் தாக்கியதாகவும் ஷெபாஸ் ஷெரீப் கூறினார். "ஒரு பாடம் கற்பிக்க ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அதிகாலை 4:30 மணிக்கு செயல்பட எங்கள் ஆயுதப்படைகள் தயாராக இருந்தன. ஆனால் அந்த நேரம் வருவதற்கு முன்பே, இந்தியா மீண்டும் பிரம்மோஸைப் பயன்படுத்தி பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது." என்று ஷெபாஸ் ஷெரீப் கூறினார். இந்த தாக்குதலுக்குப் பிறகே செய்வதறியாது நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்திக் கொள்ளலாம் என இந்தியாவிடம் சமாதானத்திற்குப் பேச முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post