LOADING...
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஏற்படுத்த பாகிஸ்தான் தீவிரம் - ஜேடி வேன்ஸ் பங்கேற்க வாய்ப்பு
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஏற்படுத்த பாகிஸ்தான் தீவிரம்

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஏற்படுத்த பாகிஸ்தான் தீவிரம் - ஜேடி வேன்ஸ் பங்கேற்க வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 24, 2026
07:14 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் கடந்த நான்கு வாரங்களாக நீடித்து வரும் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்த வார இறுதியில் ஒரு முக்கியச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் திரைமறைவில் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக இந்தப் பேச்சுவார்த்தை அமையவுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாகப் பேசி அமைதி முயற்சிகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அதேபோல், பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஈரான் அதிபர் ஆகிய இருவரிடமும் தனித்தனியாக பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை பங்கேற்பாளர்கள்

அமெரிக்கா சார்பில் அந்நாட்டின் துணை அதிபர் ஜேடி வேன்ஸ் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், ட்ரம்ப்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் உடன் ஏற்கனவே தொடர்பில் இருப்பதாக தெரிகிறது.

முரண்

முரண்பட்ட கருத்துக்கள்

ட்ரம்ப்பின் நம்பிக்கை: "நாங்கள் மிக முக்கியமான புள்ளிகளில் உடன்பாடு கண்டுள்ளோம். இந்த 5 நாள் இடைவெளியில் தீர்வு கிடைத்தால் போர் முடிவுக்கு வரும்; இல்லையெனில் மீண்டும் தாக்குதல் தொடரும்," என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் மறுப்பு: ஆனால், ஈரானிய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை எனத் தொடர்ந்து மறுத்து வருகிறது. எனினும், "மத்தியஸ்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, அதில் முன்னேற்றமும் உள்ளது" எனத் தகவல்கள் கூறுகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள வேளையில், இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பு போரை நிறுத்த உதவும் என உலக நாடுகள் பெரிதும் எதிர்பார்க்கின்றன.

Advertisement