Loading...
பாகிஸ்தானில் ஸ்மார்ட் லாக்டவுன் அமல்? பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.384 ஆக உயர்வு
பாகிஸ்தானில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் ஸ்மார்ட் லாக்டவுன் மேற்கொள்ள திட்டம்

பாகிஸ்தானில் ஸ்மார்ட் லாக்டவுன் அமல்? பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.384 ஆக உயர்வு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 16, 2026
02:13 pm

செய்தி முன்னோட்டம்

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகப் பாதைகளான ஹார்முஸ் மற்றும் பாப் எல்-மண்டேப் ஜலசந்திகளில் தட்டுப்பாடு அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் ஸ்மார்ட் லாக்டவுன் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில், போக்குவரத்து துறையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்கான பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

விலை உயர்வு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு

பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் ஹை-ஸ்பீட் டீசல் (HSD) விலையை உயர்த்தியுள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.

லிட்டருக்கு ரூ.4.10 உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.384.34 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ஹை-ஸ்பீட் டீசல் லிட்டருக்கு ரூ.6.41 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.415.83 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த 'ஸ்மார்ட் லாக்டவுன்' அமல்படுத்துவது அரசின் பரிசீலனையில் உள்ளதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் அட்டா தரார் தெரிவித்துள்ளார்.

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் மற்றும் கடைகளை விரைவில் மூடுதல் போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும். இருப்பினும், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் முசாடிக் மாலிக் இதுகுறித்த விவாதங்களை மறுத்துள்ளார்.

நிவாரணத் திட்டம்

பிரதமரின் எரிபொருள் நிவாரணத் திட்டம்

எண்ணெய் விலை உயர்வால் மக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கப் பிரதமரின் நிவாரணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி,, இருசக்கர வாகன ஓட்டிகள் வாரத்திற்கு 5 லிட்டர் மானிய விலை பெட்ரோல் பெறலாம். கார் உரிமையாளர்கள், 10 நாட்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் மானிய விலை பெட்ரோல் பெறத் தகுதியுடையவர்கள்.

இந்த நிவாரணம் தற்போதைய நிதி நெருக்கடிக்கு முழுமையாக போதாது என்றாலும், பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப அரசு அளிக்கும் அதிகபட்ச உதவி இதுவே என மாலிக் ஒப்புக்கொண்டுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்ட இந்த மானியத் திட்டத்தை நாட்டின் பிற மாகாணங்களுக்கும் விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT