வட கொரியாவில் சிரிப்பதற்கு தடையா?
11 நாட்கள் யாரும் சிரிக்க கூடாது என்று சமீபத்தில் வட கொரியாவில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உனின் தந்தையும் முன்னாள் அதிபருமான 'கிம் ஜாங் இல்' நினைவு நாள் கடந்த 17அம் தேதி அனுசரிக்கப்பட்டது. இது அவரது 11வது நினைவு நாள் என்பதால் அன்றிலிருந்து 11 நாட்களுக்கு நாட்டில் யாரும் சிரிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அது போக, துக்கம் அனுசரிப்படும் இந்த 11 நாட்களும் நாட்டு மக்கள் யாரும் மது அருந்தக்கூடாது என்றும் கடைகளுக்கு செல்ல கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தடைகளை மீறினால் மரண தண்டனையா?!
மேலும், இறப்பு நடந்த வீடுகளில் கூட சத்தம் போட்டு அழக்கூடாது மெதுவாக தான் அழவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படி இந்த 11 நாட்களுக்கு பல்வேறு தடை விதித்த வடகொரியா அரசு, இதை யாராவது மீறினால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்தும் உள்ளது. "இப்படியே போனால், இந்த 11 நாட்களுக்குள் பிறந்த குழந்தைகள் யாரும் வாழ்நாளில் தங்கள் பிறந்தநாளை கொண்டாடவே கூடாது என்ற உத்தரவு கூட வரலாம்" என்று வட கொரியாவின் ஊடகங்கள் இதை நக்கலாக பதிவிட்டுள்ளனர். மனிதர்களுக்கு இயற்கையாக தோன்றும் சிரிப்பு அழுகை போன்ற உணர்ச்சிகளுக்கு தடை விதிப்பதும் அதை மீறினால் மரண தண்டனை வழங்குவதும் 'ரொம்ப ஓவர்' என்று இணைய வாசிகள் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.