லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் கேரளாவை சேர்ந்த நித்யா ராமன் புதிய மேயராகத் தேர்வு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் பிரபல நகரான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற பரபரப்பான மேயர் தேர்தலில், கேரளாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய நித்யா ராமன் வெற்றிப் பெற்றுள்ளார். டிசிஷன் டெஸ்க் தரவுகளின்படி, தற்போதைய மேயரான கரன் பாஸ்ஸை தோற்கடித்து, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முதல் ஆசிய-அமெரிக்க மேயராகவும், இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். தரவுகளின்படி நித்யா ராமன் 51.1% வாக்குகளையும், கரன் பாஸ் 48.33% வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Decision Desk HQ projects Nithya Raman wins the CA Los Angeles Mayor Nonpartisan General Election#DecisionMade: 7:49 PM EST
— Decision Desk HQ (@DecisionDeskHQ) November 5, 2026
Follow live results here: https://t.co/1kpbRZUYUv pic.twitter.com/LHwjhhfjjz
விவரங்கள்
யார் இந்த நித்யா ராமன்?
கேரளா மாநிலத்தில் 1981-இல் பிறந்த நித்யா ராமன், தனது 6-வது வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.
22-வது வயதில் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற அவர், உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
இந்தியாவில் 'Transparent Chennai' என்ற நகர்ப்புற ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கி சுகாதாரம் மற்றும் துப்புரவுப் பணிகளை மேம்படுத்த உதவினார்.
2013-இல் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற பிறகு, 'SELAH Neighborhood Homeless Coalition' அமைப்பை இணை-நிறுவனர் மற்றும் 'Time's Up Entertainment' அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.