"ஏலியன்" கடல் உயிரினம் கண்டுபிடிப்பு
மீனவர் ஒருவரின் கையில் பிடிபட்ட ஒரு "ஏலியன்" கடல்வாழ் உயிரினத்தின் வீடியோ இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மீன்பிடிக்க சென்றவர்கள் சிலர் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். கண்ணாடி போன்ற உடலை கொண்ட இந்த உயிரினம் பார்ப்பதற்கு சின்னதாக இருந்தாலும் நம் மனதிற்குள் ஏதோ திகிலைப் பரப்புகிறது. கடல் வாழ் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், இது என்ன வகையான உயிரினம் என்பது இதுவரை தெரியவில்லை. எனினும், இணையவாசிகளும் ட்விட்டர் வாசிகளும் இதை "ஏலியன்" உயிரினம் என்று அழைத்து வருகின்றனர்.