LOADING...
புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி நியமனம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஈரான்
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி நியமனம்

புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி நியமனம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஈரான்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 09, 2026
08:25 am

செய்தி முன்னோட்டம்

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகனான 56 வயது மொஜ்தபா கமேனி, நாட்டின் புதிய உச்ச தலைவராக இன்று (மார்ச் 9) அதிகாலை அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலியத் தாக்குதலில் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நிலவி வந்த தலைமைத்துவப் போட்டிக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

அதிகாரம்

அதிகாரமும் பொறுப்புகளும்

ஈரானின் நிபுணர்கள் குழு வழங்கிய பலமான வாக்குகள் அடிப்படையில் மொஜ்தபா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக அவர் பின்வரும் அதிகாரங்களைக் கொண்டிருப்பார்: ஈரான் ராணுவம் மற்றும் சக்திவாய்ந்த புரட்சிகரக் காவல்படையின் தலைமைத் தளபதியாகச் செயல்படுவார். அணு ஆயுதங்களை உருவாக்கப் பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பு மீதான முழு அதிகாரம் இனி இவரிடமே இருக்கும். நாட்டின் அரசியல் மற்றும் மத விவகாரங்களில் இவருடைய முடிவே இறுதியானது.

நிலைப்பாடு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நிலைப்பாடு

மொஜ்தபா கமேனியின் நியமனம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கமேனியின் மகன் எனக்குத் துளியும் ஏற்கத்தக்கவர் அல்ல. ஈரானுக்கு அமைதியைக் கொண்டுவரும் ஒருவரையே நாங்கள் விரும்புகிறோம்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், தனது அங்கீகாரம் இல்லாத எந்தவொரு தலைவரும் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். புதிய தலைவரை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், தற்போது டெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது.

Advertisement

பொருளாதார பாதிப்பு

பிராந்தியப் பதற்றமும் பொருளாதாரப் பாதிப்பும்

ஈரான் - இஸ்ரேல் போர் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அதன் பாதிப்புகள் தீவிரமடைந்துள்ளன. போர் காரணமாக எண்ணெய் உற்பத்தி மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு $100 ஐத் தாண்டியுள்ளது. ஈரானின் தாக்குதலால் பஹ்ரைனில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் சேதமடைந்துள்ளதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அண்டை நாடுகளின் மீது ஈரான் நடத்தி வரும் பொறுப்பற்ற தாக்குதல்களை அரபு லீக் அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.

Advertisement