NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கிளாடியா ஷீன்பாம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கிளாடியா ஷீன்பாம் 

    மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கிளாடியா ஷீன்பாம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 03, 2024
    01:45 pm

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் 61 வயதான மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயர் 60% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக மெக்சிகோவின் அதிகாரப்பூர்வ தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இது அவரது முக்கிய போட்டியாளரான தொழிலதிபர் ஸோசிட் கால்வேஸை விட கிட்டத்தட்ட 30 சதவீத புள்ளிகள் முன்னிலையில் உள்ளது.

    கிளாடியா ஷீன்பாம் அக்டோபர் 1 ஆம் தேதி தனது வழிகாட்டியும், முன்னாள் அதிபருமான ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடருக்கு அடுத்த அதிபராக பதவியேற்பார்.

    முன்னாள் எரிசக்தி விஞ்ஞானியான ஷீன்பாம், முன்னாள் அதிபர் லோபஸ் ஒப்ரடோர் செய்த "முன்னேற்றங்களை" தொடர்ந்து முன்னெடுத்து செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மெக்சிகோ

    விஞ்ஞானியாக இருந்த கிளாடியா ஷீன்பாம்

    "நான் உங்களது நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன்" என்று கிளாடியா ஷீன்பாம் தனது வெற்றி உரையில் வாக்காளர்களிடம் கூறினார்.

    அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன்னர், கிளாடியா ஷீன்பாம் மெக்ஸிகோ நகரத்தின் மேயராக இருந்தார்.

    இது நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பதவிகளில் ஒன்றாகும். மேலும், இது அவரது அதிபர் பதவிக்கு வழி வகுத்ததாகக் கருதப்படுகிறது.

    நாஜிகளிடமிருந்து தப்பி பல்கேரியாவிலிருந்து மெக்ஸிகோவிற்கு குடிபெயர்ந்த யூதர்கள் ஷீன்பாமின் தாய்வழி தாத்தா பாட்டி ஆவர்.

    அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு இவர் ஒரு விஞ்ஞானியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரது தந்தைவழி தாத்தா பாட்டி லிதுவேனியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், அவரது பெற்றோர் இருவரும் விஞ்ஞானிகள் ஆவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மெக்சிகோ
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானின் இரவு நேர ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு 'தக்க பதிலடி கொடுக்கப்பட்டது': இந்திய ராணுவம்  இந்திய ராணுவம்
    விமான தாக்குதல் சைரன்கள் ஒலிப்பு; ட்ரோன்கள் அச்சுறுத்தலால் உச்ச கட்ட எச்சரிக்கையில் சண்டிகர் சண்டிகர்
    இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள நந்தினி குப்தா! அழகி போட்டி
    பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்!  விமானம்

    மெக்சிகோ

    சர்வதேச அருங்காட்சியக தினம்: உலகம் முழுவதும் உள்ள சில வித்தியாசமான அருங்காட்சியகங்கள் உலகம்
    மெக்சிகோவில் 27 உயிர்களை காவு வாங்கிய பேருந்து விபத்து காவல்துறை
    மெக்ஸிகோ பேருந்து விபத்து; இந்தியர்கள் உள்பட 18 பேர் உயிரிழப்பு உலகம்
    2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி இந்தியா

    உலகம்

    தரைத் தாக்குதலை முன்னிட்டு 1 லட்சம் பேரை ரஃபாவிலிருந்து வெளியேற்றுகிறது இஸ்ரேல்  இஸ்ரேல்
    புதிய விமானம் தாங்கி கப்பலின் கடல் சோதனைகளை தொடங்கியது சீனா  சீனா
    2 ரஃபா பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் இஸ்ரேல்
    உலக வெப்பம் அதிகரிப்பு: உலகம் முழுவதும் ஏப்ரல் 2024இல் அதிகபட்ச வெப்பநிலை பதிவு உலக செய்திகள்

    உலக செய்திகள்

    ஆபாச நடிகையுடனான டொனால்ட் டிரம்பின் அந்தரங்க வாழ்க்கை அம்பலமானது அமெரிக்கா
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு  இஸ்ரேல்
    மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபர் பலி அமெரிக்கா
    ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் நான்காவது சந்தேக நபர் கைது கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025