Page Loader
மெக்ஸிகோ பேருந்து விபத்து; இந்தியர்கள் உள்பட 18 பேர் உயிரிழப்பு

மெக்ஸிகோ பேருந்து விபத்து; இந்தியர்கள் உள்பட 18 பேர் உயிரிழப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 04, 2023
02:01 pm

செய்தி முன்னோட்டம்

மெக்சிகோவில், இன்று அதிகாலை, 42 பயணிகள் அடங்கிய சொகுசு பேருந்து ஒன்று டிஜுவானா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அமெரிக்கா எல்லையில் அமைந்துள்ள டிஜுவானாவிற்கு, மலைகளை தாண்டி செல்ல வேண்டும் எனக்கூறப்படுகிறது. அப்போது, டெபிக்கி என்ற தலைநகரை நெருங்கும் வேளையில், பர்ரான்கா பிளாங்கா என்ற இடத்திற்கு அருகே உள்ள வளைவில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. விலகிய பேருந்து, சாலையில் இருந்து விலகி அங்கிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 18 பயணிகள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். 20 பேர் பலத்த காயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணப்பட்டவர்களில் இந்தியர்களும் அடங்குவர் என்றும், அவர்களில் எத்தனை பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறித்து இன்னும் அறிக்கை வெளியாகவில்லை.

ட்விட்டர் அஞ்சல்

மெக்ஸிகோ பேருந்து விபத்து