Loading...
நேட்டோ பாணியில் புதிய ராணுவக் கூட்டணி: சவுதி, பாகிஸ்தான், துருக்கி மெக்கா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
கடந்த ஆகஸ்ட் 7 அன்று மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது

நேட்டோ பாணியில் புதிய ராணுவக் கூட்டணி: சவுதி, பாகிஸ்தான், துருக்கி மெக்கா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 21, 2026
04:26 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் 7 அன்று மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஒப்பந்தத்தின் பிரிவு 16-இன் படி, இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நாளிலிருந்து 10 ஆண்டுகள் முடியும் வரை எந்தவொரு உறுப்பினரும் இதிலிருந்து விலக முடியாது. 10 ஆண்டுகளுக்கு பிறகு விலக விரும்பினால், குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பாக தூதரக வழிகளில் எழுத்துப்பூர்வ அறிவிப்பை அளிக்க வேண்டும்.

உறுதிமொழி

'நேட்டோ'-வை போலவே கூட்டுப் பாதுகாப்பு உறுதிமொழி

இந்த ஒப்பந்தத்தில் மிக முக்கியமாக கூட்டுப் பாதுகாப்பு உறுதிமொழி இடம்பெற்றுள்ளது.

அதன்படி, உறுப்பு நாடுகளின் எல்லை ஒருமைப்பாடு, இறையாண்மை அல்லது சர்வதேச அங்கீகாரம் பெற்ற எல்லைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அனைத்து வழிகளையும் பயன்படுத்தி அதை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நேட்டோ அமைப்பின் பிரிவு 5-ஐப் போலவே, உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது வெளிநாட்டவர் நடத்தும் ஆயுதமேந்திய தாக்குதலானது, மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும்.

அச்சுறுத்தல்

ஹவுதி அச்சுறுத்தலும் உறுப்பு நாடுகளின் பங்களிப்பும்

ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது நடத்தி வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் இக்கூட்டணிக்கு முதல் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன.

சவுதியின் புனிதத் தலங்களையும் இறையாண்மையையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து ராணுவ உதவிகளையும் வழங்குவதாக பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.

துருக்கி தனது பங்களிப்பாக ராணுவ உபகரணங்கள், உளவுத்துறைத் தகவல்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை வழங்கும்.

ஆனால், தாக்குதல் நடவடிக்கைகளுக்காக தங்கள் நாட்டுப் படைகளை அனுப்ப முடியாது என்றும், வெளிநாடுகளுக்கு படைகளை அனுப்ப தங்கள் நாடாளுமன்றத்தின் தனி அனுமதி தேவை என்றும் துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹக்கான் ஃபிடான் தெரிவித்துள்ளார்.

இந்த வரலாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்த துருக்கி நாடாளுமன்ற ஒப்புதலையும், சவுதி அரேபியா அரச ஆணைகளையும் பயன்படுத்தி வருகின்றன.

ADVERTISEMENT