
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 31 பேர் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயாஸ் மாகாணத்தில் உள்ள செபு நகரை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9 அளவுக்கு பதிவான இந்த நிலநடுக்கம், பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. நில அதிர்வுகள் உணரப்பட்டவுடன் மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை விட்டு வெளியேறி, வீதிகளில் பதறியடித்து ஓடினர். மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதால், அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சில கட்டடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்தன. இதில் 31 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் எத்தனை பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்பதில் தெளிவான தகவல் இல்லை.
விவரங்கள்
தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு
தகவலறிந்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் உள்ளூர் பேரிடர் மீட்பு குழுக்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றனர் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் செபு நகரில் நிலநடுக்கம் ஏற்படுதல், பொதுமக்கள் மத்தியில் பெரும் பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி இடம் பெயர ஆரம்பித்துள்ளனர். நிலநடுக்கத்துக்குப் பிறகு பிற்பொழுதுகளில் மேலும் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என செபுவின் நிலநடுக்கவியல் மையம் அறிவுறுத்தியுள்ளது.