LOADING...
உலகப் புகழ்பெற்ற பாரிஸ் லூவர் அருங்காட்சியகம் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து மூடப்பட்டது
உலகப் புகழ்பெற்ற பாரிஸ் லூவர் அருங்காட்சியகம் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து மூடல்

உலகப் புகழ்பெற்ற பாரிஸ் லூவர் அருங்காட்சியகம் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து மூடப்பட்டது

எழுதியவர் Sekar Chinnappan
Oct 19, 2025
03:07 pm

செய்தி முன்னோட்டம்

உலகப் புகழ்பெற்ற பாரிஸ் நகரிலுள்ள லூவர் அருங்காட்சியகம், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) அன்று கொள்ளைச் சம்பவம் ஒன்று பதிவானதைத் தொடர்ந்து திடீரென மூடப்பட்டது. பிரெஞ்சு கலாச்சாரத் துறை அமைச்சர் ராச்சிதா தாதி இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார். அருங்காட்சியகம் திறக்கப்பட்ட சிறிது நேரத்தில் அதிகாலையிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்தார். லூவர் அருங்காட்சியகம், அசாதாரண காரணங்களுக்காக ஒரு நாள் முழுவதும் மூடப்படுவதாக அறிவித்தது. இருப்பினும், கொள்ளையடிக்கப்பட்ட குறிப்பிட்ட பொருட்கள் அல்லது பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து அருங்காட்சியக நிர்வாகம் உடனடியாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

விசாரணை

விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் உறுதி

அமைச்சர் தாதி, தான் அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும், காவல்துறையின் விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் உறுதிப்படுத்தினார். மேலும், இந்தச் சம்பவத்தின் போது யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர். மோனாலிசா போன்ற உலகப் புகழ்பெற்ற தலைசிறந்த கலைப் படைப்புகளைக் கொண்டுள்ளன. மிகவும் பாதுகாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் மூடப்பட்டது என்பது, பாதுகாப்பில் ஏற்பட்ட கடுமையான சிக்கலை வெளிப்படுத்துகிறது. உலகின் அதிகம் பார்வையிடப்படும் கலாச்சாரத் தளங்களில் ஒன்றான இங்கு நடந்த கொள்ளை குறித்து, விரைவில் கூடுதல் தகவல்களை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.