தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்த லாகிடெக் நிறுவனத்தின் சிஇஓ பிராக்கென் டேரல்
செய்தி முன்னோட்டம்
ஸ்விட்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்ட லாகிடெக் (Logitech) நிறுவனத்தின் சிஇஓ-வான பிராக்கென் டேரல், சிஇஓ பதவியிலிருந்து ராஜினாமா செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக லாகிடெக் நிறுவனத்தின் சிஇஓ-வாக பணிபுரிந்த அவர், வேறு வாய்ப்புகளைத் தேடி இந்த பதவியில் இருந்து விலகியிருப்பதாக இது குறித்த பத்திரிகை அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது லாகிடெக் நிறுவனம்.
கடந்த செவ்வாய்க்கிழமையே அவர் சிஇஓ பதவியில் இருந்து விலகிவிட்டதாகவும், தன்னுடைய பணிகளை ஒப்படைப்பதற்காக இன்னும் சில காலம் லாகிடெக் நிறுவனத்துடன் சேர்ந்து பயணிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணினி மற்றும் லேப்டாப்பிற்கான கீபோர்டு, மௌஸ் மற்றும் வெப்கேம்களை தயாரித்து விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது லாகிடெக்.
லாகிடெக்
லாகிடெக்கின் புதிய சிஇஓ யார்?
கொரோனா காலத்தில் பல்வேறு டெக் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதியளித்தன. அந்த நேரத்தில் லாகிடெக் நிறுவனங்களின் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான தேவை உயர்ந்தது.
ஆனால், லாக்டௌன் காலம் முடிந்து, ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்குத் திரும்பி வரும் நிலையில், அந்நிறுவனத்தின் வருவாய் சற்றே பாதிக்கப்பட்டிருக்கிறது.
டேரல்லின் தலைமையில் ப்ளூ மைக்ரோபோன், ஆஸ்ட்ரோ மற்றும் ஸ்ட்ரீம்லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களைக் கையக்கப்படுத்தியது லாகிடெக்.
டேரல்லின் ராஜினாமாவைத் தொடர்ந்து தற்போது புதிய சிஇஓ-வைம தேடிவருகிறது லாகிடெக் நிறுவனம். இதற்கிடையில் இடைக்கால சிஇஓ-வாக அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு உறுப்பினர்களில் ஒருவரான கை கெஸ்ட், இடைக்கால சிஇஓ-வாக பொறுப்பில் இருப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.