LOADING...
தன்னை 'கூலி' என அழைத்துக்கொண்ட டிரினிடாட் பிரதமர் கம்லா பிரசாத் பிஸ்சேசரின் பேச்சு வைரல்
டிரினிடாட் பிரதமர் கம்லா பிரசாத் பிஸ்சேசர்

தன்னை 'கூலி' என அழைத்துக்கொண்ட டிரினிடாட் பிரதமர் கம்லா பிரசாத் பிஸ்சேசரின் பேச்சு வைரல்

எழுதியவர் Venkatalakshmi V
May 12, 2026
05:43 pm

செய்தி முன்னோட்டம்

டிரினிடாட் மற்றும் டொபாகோ பிரதமர் கம்லா பிரசாத் பிஸ்சேசர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்ற நிகழ்வொன்றில் "கூலி" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது இணையதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இந்தியத் தொழிலாளர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையை, அவர் ஒரு பெருமைமிகு அடையாளமாக மாற்றிய விதம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பீகார் மகள்

அடையாளத்தை மீட்டெடுக்கும் 'பீகார் மகள்'

நிகழ்வில் பேசிய கம்லா பிரசாத் பிஸ்சேசர், "டிரினிடாட்டில் இன்றும் இந்தியர்கள் சில இடங்களில் 'கூலிகள்' என்றே அழைக்கப்படுகிறார்கள். அதில் நான் எந்த அவமானமும் படவில்லை. இன்று ஒரு சிறிய 'கூலி' சிறுமி டிரினிடாட்டின் பிரதமராக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்" என்று உருக்கமாகத் தெரிவித்தார். கடந்த 2025-ஆம் ஆண்டு டிரினிடாட்டிற்குப் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இவரை "பீகாரின் மகள்" என்று அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

வாழ்க்கை

தோட்டத் தொழிலாளர் முதல் பிரதமர் வரை

கம்லாவின் முன்னோர்கள் 1880-களில் பீகாரின் பக்சர் மாவட்டத்தில் உள்ள பெலுபூர் கிராமத்திலிருந்து கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாக டிரினிடாட்டிற்குப் புலம்பெயர்ந்தனர். 'காலா பானி' எனப்படும் கடல் கடந்து சென்ற ஆயிரக்கணக்கான இந்தியர்களில் இவர்களது குடும்பமும் ஒன்று. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அதே வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு நாட்டின் உயரிய பதவியை அடைந்திருப்பது இந்தோ-கரீபியன் சமூகத்தின் வளர்ச்சிக்கு ஒரு சான்றாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement

ஆதரவு

சமூக வலைதளங்களில் ஆதரவும் கவலையும்

கம்லாவின் இந்தப் பேச்சுக்கு இணையவாசிகள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர், "தன்னை அவமானப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையை அவர் அதிகாரத்தின் அடையாளமாக மாற்றியுள்ளார்" எனப் பாராட்டி வருகின்றனர். மற்றொரு தரப்பினர், இத்தகைய வெளிப்படையான பேச்சு இனவாதத் தூண்டுதல்களுக்கு வழிவகுக்கலாம் என்ற கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் வலியைச் சாதனையாக மாற்றிய கம்லாவின் பயணம் பலருக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. 2010 முதல் 2015 வரை பிரதமராகப் பணியாற்றிய கம்லா பிரசாத் பிஸ்சேசர், 2025 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று டிரினிடாட் மற்றும் டொபாகோவின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement