ஜோர்டான் பட்டத்து இளவரசரே கார் ஓட்டி சென்று மோடியை அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றார்!
செய்தி முன்னோட்டம்
மூன்று நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக ஜோர்டானுக்கு வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜோர்டான் நாட்டின் பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லா II ஒரு சிறப்பான மரியாதையை செலுத்தியுள்ளார். ஜோர்டான் தலைநகர் அம்மானில், பிரதமர் மோடியை அந்நாட்டின் மிகப்பெரிய அருங்காட்சியகமான 'ஜோர்டான் மியூசியம்'-திற்கு இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லா II தமது காரை தானே ஓட்டிச் சென்று, அழைத்து சென்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கம் மற்றும் நட்புறவின் வெளிப்பாடாக இந்தச் சிறப்பு மரியாதை கருதப்படுகிறது. இதனை பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
On the way to The Jordan Museum with His Royal Highness Crown Prince Al-Hussein bin Abdullah II. pic.twitter.com/CtwcQHkHBZ
— Narendra Modi (@narendramodi) December 16, 2025
விவரம்
பிரதமர் மோடியின் பயண விவரம்
ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி திங்கட்கிழமை (டிசம்பர் 15) அன்று ஜோர்டானுக்கு வந்தார். மன்னருடன் இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர் மேலாண்மை, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்குமிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஜோர்டானில் தனது நிகழ்ச்சிகளை முடித்த பின், பிரதமர் மோடி அடுத்ததாக எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்ய உள்ளார்.