ஜோ பைடன், டிரம்ப் முதல் விவாதத்திற்கு 'ஹைடெக்' மைக்; அப்படி என்றால் என்ன?
நாளை, வெள்ளியன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான முக்கியமான ஜனாதிபதி தேர்தலுக்கான விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்திற்கு முன்னதாக, விவாதத்தை ஏற்பாடு செய்துள்ள CNN பல விதிகளை வகுத்துள்ளது. இதனை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின்படி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ , அவர்களின் விவாதத்தின் போது பைடன் மற்றும் டிரம்ப் ஆகியோருக்கு உதவ 'உயர் தொழில்நுட்ப' மைக்ரோஃபோன்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும், அவை எவ்வாறு செயல்படும் என்பதைக் காட்டுகிறது.
மைக்ரோஃபோன் எப்படி செயல்படும் என்பதை விலகிய அதிகாரிகள்
இந்த மைக்ரோஃபோன்களில் பச்சை விளக்குகள் உள்ளன. அதாவது அவை ஒளிரும் போது, அவை நேயர்களுக்கு கேட்கக்கூடிய நிலையில் இருக்கிறது என்பதை வேட்பாளர் அறிந்துகொள்வார். ஒரு வேட்பாளரின் மைக்ரோஃபோன் ஆஃப் செய்யப்பட்டிருந்தால், அவர் எதிராளியிடம் பேசவோ அல்லது குறுக்கிடவோ முயன்றாலோ, அவரது குரல் தொலைக்காட்சியில் பார்க்கும் நேயர்களுக்கு கேட்காது. மைக்ரோஃபோன் விதிகளை விளக்கி, சிஎன்என் தொகுப்பாளர்கள், ஜனாதிபதி விவாதத்திற்கு ஒப்புக்கொண்டதன் மூலம், ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் விதிகளுக்கு இணங்க ஒப்புக்கொண்டனர் எனத்தெரிவித்தனர். அட்லாண்டாவில் CNN ஊடாகம்தான் இந்த விவாதத்தை நடத்துகிறது. 90 நிமிடம் நடைபெறும் இந்த விவாதம், ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களான ஜோ பைடனுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான முதல் நேரடி மோதலைக் குறிக்கும்.
ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கான பிற விதிகள்
CNN வகுத்துள்ள விதிகளின்படி, விவாதத்தில் இரண்டு வணிக இடைவெளிகள் இருக்கும். மேலும் தலைவர்களின் பிரச்சார ஊழியர்கள் அந்த 90 நிமிடங்களில் அவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது. கூடுதலாக, பைடன் மற்றும் டிரம்ப் இருவரும் ஒரு சீரான மேடையில் தோன்ற ஒப்புக்கொண்டனர். மேலும் ஏதேனும் விவகாரத்தில் அவர்களின் நிலைப்பாடு அறிய டாஸ் மூலம் தீர்மானிக்கப்படும். பேச வேண்டிய வேட்பாளர் தவிர, மற்றவரின் மைக் விவாதம் முழுவதும் ம்யூட் செய்யப்படும். மேலும், விவாத மேடையில் முன் எழுதப்பட்ட குறிப்புகள் அனுமதிக்கப்படாது. எனினும் இரு தலைவர்களுக்கும் ஒரு பேனா, ஒரு பேப்பர் பேட் மற்றும் ஒரு பாட்டில் தண்ணீர் வழங்கப்படும்.