Page Loader
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் காதலா? எலான் மஸ்க் பதில்
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் காதலா?

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் காதலா? எலான் மஸ்க் பதில்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2024
05:25 pm

செய்தி முன்னோட்டம்

நியூயார்க்கில் நடந்த அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது வழங்கும் விழாவில், கோடீஸ்வரர் எலான் மஸ்க், இத்தாலிய அதிபர் ஜியோர்ஜியா மெலோனியைப் பாராட்டி விருது வழங்கினார். இதைத் தொடர்ந்து, சமூக ஊடகப் பயனர்கள் இருவருக்குள்ளும் நட்பை தாண்டிய ஒரு உறவு உள்ளது என கிசுகிசுக்க தொடங்கினர். கூடுதலாக மஸ்க், மெலோனிக்கு விருதை வழங்கும்போது, 'வெளிப்புற அழகை விட உட்புறத்தில் இன்னும் அழகாக இருக்கும் ஒருவருக்கு" எனக்கூறி, 'இந்த விருதை வழங்குவது ஒரு மரியாதை' என்று தெரிவித்தார். மேலும், "அவர் உண்மையானவர், நேர்மையானவர், உண்மையுள்ளவர் - இது எல்லா அரசியல்வாதிகளையும் எப்போதும் சொல்ல முடியாது" என்று அவர் மேலும் கூறினார். மெலோனி தனது X கணக்கில் உரையின் கிளிப்பை பகிர்ந்து,"நன்றி எலான்" என்று எழுதியிருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

எதிர்வினை

எதிர்வினைகளும், எலான் மஸ்கின் பதிலும்

இந்த வீடியோ வைரலாக பரவ, இருவரும் டேட்டிங் செய்வது குறித்த கிசுகிசுக்களை தூண்டியது. சில சமூக ஊடக பயனர்கள் எலான் மஸ்க்கிற்கு, ஜியோர்ஜியா மெலோனி மீது "ஈர்ப்பு" இருப்பதாகக் கூறினர். சிலரோ, இது உண்மையாக இருக்க வேண்டுமெனவும், அவர்கள் "அழகான மற்றும் அற்புதமான" ஜோடியாக இருப்பார்கள் எனவும் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை டெஸ்லா கிளப் என்கிற எக்ஸ் பக்கம் பகிர்ந்து,"அவர்கள் டேட்டிங் செய்வார்கள் என்று நினைக்கிறீர்களா?" என் கேள்வி எழுப்பியது. இந்த பதிவிற்கு பதிலளித்த எலான் மஸ்க், தான் ஜார்ஜியா மெலோனியுடன் டேட்டிங் செய்யவில்லை என்பதை உடனடியாக தெளிவுபடுத்தினார். "நாங்கள் டேட்டிங் செய்யவில்லை," என்று அவர் டெஸ்லா கிளப்பின் இடுகைக்கு பதிலளித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post