NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / டிரம்ப் எச்சரிக்கையால் ஆத்திரம்; ஏவுகணைகளுடன் தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிரம்ப் எச்சரிக்கையால் ஆத்திரம்; ஏவுகணைகளுடன் தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்
    ஏவுகணைகளுடன் தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்

    டிரம்ப் எச்சரிக்கையால் ஆத்திரம்; ஏவுகணைகளுடன் தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 31, 2025
    09:02 am

    செய்தி முன்னோட்டம்

    டொனால்ட் டிரம்பின் வெடிகுண்டு மிரட்டலுக்கு ஈரான் அடிபணிய மறுத்துவிட்டது.

    தேவைப்பட்டால் "அமெரிக்கா தொடர்பான நிலைகளை" தாக்க அதன் நிலத்தடி ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தை தயார் செய்து வருவதாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகமான டெஹ்ரான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி, தெஹ்ரான் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தால், ஈரான் மீது குண்டுவீசுவது ஒரு வழி என்று கூறியிருந்தார்.

    டிரம்பின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஈரான் தனது ஏவுகணைகளை நாடு முழுவதும் உள்ள நிலத்தடி வசதிகளுக்குள் ஏவுவதற்குத் தயாராக இருக்கும் நிலையில் வைத்துள்ளதாகவும், அவை வான்வழித் தாக்குதல்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெஹ்ரான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    அச்சுறுத்தல்

    அமெரிக்காவின் அச்சுறுத்தலும், ஈரானின் எதிர்வினையும் 

    "அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்யாவிட்டால், ஒரு குண்டுவெடிப்பு ஏற்படும். அவர்கள் இதற்கு முன்பு பார்த்திராத குண்டுவெடிப்பு இதுவாகும்" என்று NBC செய்திக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறினார்.

    மேலும், ஈரானை "இரண்டாம் நிலை வரிகளால்" தாக்குவேன் என்றும் அவர் எச்சரித்தார்.

    டிரம்பின் செய்தியை மேலும் வலியுறுத்திய அமெரிக்க வெளியுறவுத்துறை, இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தால் ஈரான் "மோசமான" விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது.

    ஈரானின் அணுசக்தி திட்டத்தை ஒழிப்பதற்கான கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்படுவதால், அமெரிக்காவுடனான எந்தவொரு நேரடி பேச்சுவார்த்தையையும் ஈரான் நிராகரித்தது.

    அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்ததால், ஈரான் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், அதன் நிலத்தடி ஏவுகணை வசதியை வெளிப்படுத்தியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    டொனால்ட் டிரம்ப்
    அமெரிக்கா
    வெடிகுண்டு மிரட்டல்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    ஈரான்

    ஈரான் துறைமுகத்தை இயக்க இந்தியா ஒப்பந்தம்: பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை அமெரிக்கா
    பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பதிலளித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்  இந்தியா
    ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்து: மீட்புக் குழுக்கள் இன்னும் வராததால் பதட்டம்  உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து ஈரான் அதிபரின் உயிருக்கு ஆபத்து விபத்து

    டொனால்ட் டிரம்ப்

    FBI இயக்குனராக பொறுப்பேற்றார் இந்தியா வம்சாவளி காஷ் படேல்  அமெரிக்கா
    இந்தியாவின் தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு குறித்த டிரம்பின் கூற்றுகள் குறித்து மத்திய அரசு கவலை மத்திய அரசு
    அமெரிக்க ராணுவத்தின் தலைவரை அதிரடியாக டிஸ்மிஸ் செய்தார் டொனால்ட் டிரம்ப்; புதிய தலைவர் யார்? அமெரிக்கா
    2,000 USAID ஊழியர்களை பணிநீக்கம் செய்தது டிரம்ப் நிர்வாகம்; எஞ்சிய ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அமெரிக்கா

    அமெரிக்கா

    பிட்காயின் ரிசர்வை உருவாக்குவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து பிட்காயின்
    ஐரோப்பிய தூதரகங்களை மூடவும், பணியாளர்களைக் குறைக்கவும் அமெரிக்க வெளியுறவுத்துறை திட்டம் ஐரோப்பா
    இந்தியாவுடன் விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புகிறது அமெரிக்கா; அமெரிக்க வர்த்தக செயலாளர்  தகவல் வர்த்தகம்
    யானையும் டிராகனும் இணைய வேண்டும்; அமெரிக்க வர்த்தக போரை இணைந்து எதிர்க்க இந்தியாவிடம் சீனா கோரிக்கை சீனா

    வெடிகுண்டு மிரட்டல்

    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை தமிழக காவல்துறை
    மீண்டும் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை தலைமை செயலகத்திற்கு! சென்னை
    சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் பள்ளிகள்
    பெங்களூரு பள்ளி அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு  பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025