இந்திய மீட்பு படைக்கு கைதட்டி தங்கள் நன்றிகளை தெரிவிக்கும் துருக்கி மக்கள்
துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு உதவச் சென்ற NDRF மீட்பு படையினர் அங்கிருந்து நாடு திரும்பியுள்ளனர். NDRF குழுவினர் அங்கிருந்து புறப்பட்டபோது, துருக்கி மக்கள் அதானா விமான நிலையத்தில் கைதட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்தியா வந்தடைந்ததும், காஜியாபாத்தில் உள்ள அதிகாரிகள் NDRF குழு உறுப்பினர்களை வரவேற்றனர். துருக்கியில் 'ஆபரேஷன் தோஸ்த்' பணியை வெற்றிகரமாக முடித்த இந்திய மீட்பு படையினரின் முதல் அணி இன்று(பிப் 17) இந்தியாவிற்கு வந்தடைந்தது. இன்னும் இரண்டு அணிகள் நாளைக்குள் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 41,000க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கிய துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 11 நாட்களாக இந்த பேரிடர் மீட்புக் குழு இரவு பகலாக பணியாற்றி வந்தது.