Page Loader
'நான் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்' - இங்கிலாந்து பிரதமர் சிறப்புரை 
'நான் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்' - இங்கிலாந்து பிரதமர் சிறப்புரை

'நான் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்' - இங்கிலாந்து பிரதமர் சிறப்புரை 

எழுதியவர் Nivetha P
Aug 16, 2023
07:20 pm

செய்தி முன்னோட்டம்

பிரிட்டன் நாட்டிலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மொராரி பாபு என்னும் ஆன்மீகப்போதகர் கடந்த 12ம்தேதி முதல் ராமர்கதை தொடர்பான உபன்யாசத்தை நடத்தி வருகிறார். இந்த உபன்யாசம் வரும் 20ம்தேதி வரை நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய சுதந்திரத்தினமான நேற்று(ஆகஸ்ட்.,15)இந்த உபன்யாசன நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,"இந்தியாவின் சுதந்திரத்தினத்தன்று இந்த ராமர்கதை நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியினையளிக்கிறது. இதில் நான் கலந்துகொண்டதை நினைத்து பெருமையாக உணருகிறேன்"என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,"நான் இங்கு பிரதமராக வரவில்லை, இந்துமதத்தின் மீது நம்பிக்கைக்கொண்டுள்ள இந்துவாக வந்துள்ளேன். நம்பிக்கை என்பது மிகவும் தனிப்பட்ட விஷயமாகும். என் வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் அது என்னை வழிநடத்தி வருகிறது"என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் 

குழந்தை பருவத்தினை நினைவுக்கூர்ந்த இங்கிலாந்து பிரதமர் 

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் பதவியில் இருப்பது கவுரவம் தான். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல, முக்கியமான முடிவுகளை குறிப்பிட்ட நேரத்தில் திறம்பட எடுத்தாக வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், தனது இந்து நம்பிக்கை தான் தனக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும், போராடும் குணத்தினையும் வழங்கியதாக கூறினார். தனது குழந்தை பருவத்தினை நினைவுக்கூர்ந்த அவர் சவுத் ஹாம்டனில் வசிக்கையில் தனது உடன்பிறப்புடன் அருகில் இருந்த கோயிலுக்கு சென்ற நிகழ்வினையும் பகிர்ந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மேடையின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த தங்கநிற ஹனுமன் படத்தினை பார்த்த அவர், இதே போன்று தனது 10 டவுனிங் தெருவில் உள்ள தனது மேஜையில் வைக்கப்பட்டுள்ள தங்க விநாயகர் மகிழ்ச்சியாக அமர்ந்துள்ளதை நினைத்து பெருமையாக கருதுவதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.