
சுரங்கப்பாதைகளை வைத்து இஸ்ரேலுக்கு டிமிக்கி கொடுக்கும் ஹமாஸ்
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே நடந்து வரும் போரினால் இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் என்பது பலம் வாய்ந்த இராணுவத்தை கொண்ட நாடாகும். அதற்கும் மேல், மிக சக்திவாய்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்கி வருகிறது.
எனினும், பாலஸ்தீன மக்களின் புகலிடமான காசா பகுதிக்குள் இருக்கும் ஹமாஸ் குழுவினரை இஸ்ரேலால் ஒழிக்க முடியவில்லை.
இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ஹமாஸ் படையினரின் சுரங்கப்பாதைகள் தான்.
காசா முழுவதும் நிறைந்துள்ள இந்த சுரங்கப்பாதைகள் நிலப்பரவில் இருந்து 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த சுரங்கப்பாதைகளைப் பயன்படுத்தி தான் ஹமாஸ் குழுவினர் காசா பகுதியின் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்கின்றனர்.
டகன்வா
சுரங்கங்களை தகர்க்க முடியாமல் திணறும் இஸ்ரேல்
இந்த சுரங்கப்பாதைக்கு காசா முழுவதும் ஆங்காங்கே வாயில்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
நிலத்துக்கடியில் 500-கிமீ தூரம் வரை பார்த்து பார்த்து இந்த சுரங்கப்பாதையை ஹமாஸ் அமைப்பினர் கட்டி இருக்கின்றனர்.
இந்த சுரங்கபாதைகளில் தான் ஹமாஸ் குழுவினரின் ஆயுதங்களும் ஒழித்து வைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் இருந்து பிடித்து செல்லப்பட்ட பிணையக்கைதிகளும் இந்த சுரங்கங்களில் தான் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
இந்த சுரங்கத்தை அழிக்க 2015ஆம் ஆண்டு முதல் 1-பில்லியன் டாலர்களை இஸ்ரேல் செலவிட்டுள்ளது. ஆனால், இதுவரை இஸ்ரேலால் அந்த சுரங்கபாதைகள் பற்றி முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை.
இந்த சுரங்கங்களில் காற்று வருவதற்கான வசதியும் மின்சாரமும் இருப்பதால், ஹமாஸ் குழுவினர் ஒழிந்திருப்பதற்கு இது சரியான இடமாக உள்ளது.
எனவேதான், இந்த சுரங்கங்களை தகர்க்க முடியாமல் தற்போது இஸ்ரேல் திண்றிக்கொண்டிருக்கிறது.