கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் எல்லோரும் அமெரிக்காவில் காலவரையின்றி தங்க முடியாது: துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், கிரீன் கார்டு கொண்டு குடியேறிவர்கள் அனைவருமே அமெரிக்காவில் என்றென்றும் தங்குவதற்கான உரிமைக்கான உத்தரவாதத்தினை பெற முடியாது என்று கூறி புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளார்.
முன்னதாக கிரீன் கார்டு வைத்திருந்த கொலம்பியா பல்கலைக்கழக பட்டதாரி மாணவர் மஹ்மூத் கலீல் கைது செய்யப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் இதனைத்தெரிவித்தார்.
நிரந்தர ரெசிடெண்ட் கார்டு என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் கிரீன் கார்டு, இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினரை அமெரிக்காவில் வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது.
ஆனால் பெயர் இருந்தபோதிலும், "பெர்மனெண்ட் ரெசிடெண்ட்" என்பது வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பைக் குறிக்காது என JD வான்ஸ் தற்போது கூறியுள்ளார்.
பேட்டி
ஒரு தனியார் பேட்டியின் போது JD வான்ஸ் இதை கூறினார்
"ஒரு கிரீன் கார்டு வைத்திருப்பவருக்கு அமெரிக்காவில் இருக்க காலவரையற்ற உரிமை இல்லை," என்று ஜே.டி. வான்ஸ், ஃபாக்ஸ் நியூஸில் ' தி இங்க்ரஹாம் ஆங்கிள்' தொகுப்பாளினி லாரா இங்க்ரஹாமுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
"இது அடிப்படையில் பேச்சு சுதந்திரத்தைப் பற்றியது அல்ல, எனக்கு, ஆம், இது தேசிய பாதுகாப்பைப் பற்றியது, ஆனால் ஒரு அமெரிக்க பொதுமக்களாக நாம் நமது தேசிய சமூகத்தில் யாரைச் சேர முடிவு செய்கிறோம் என்பதும் மிக முக்கியமானது" என்று வான்ஸ் கூறினார்.
"இந்த நபர் அமெரிக்காவில் இருக்கக்கூடாது என்று வெளியுறவுத்துறை செயலாளரும் ஜனாதிபதியும் முடிவு செய்தால், அவர்களுக்கு இங்கு தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றால், அது அவ்வளவு எளிது," என்று அவர் மேலும் கூறினார்.
வழக்கு
மஹ்மூத் கலீல் வழக்கு
போராளிக் குழுவான ஹமாஸுடன் இணைந்த செயல்பாடுகளை மஹ்மூத் கலீல் வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டி, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அவரது கிரீன் கார்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
அவரது கைது டிரம்ப் நிர்வாகத்தின் விமர்சகர்களிடமிருந்தும், அரசியல் வலதுசாரிகள் உட்பட பேச்சு சுதந்திர ஆதரவாளர்களிடமிருந்தும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.
எந்த குற்றச்சாட்டிற்கும் உள்ளாகாத கலீல், சனிக்கிழமை நியூயார்க் நகரில் கைது செய்யப்பட்ட பின்னர் லூசியானாவில் குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தச் சட்டத்தின் பேச்சு சுதந்திரத்திற்கான பாதுகாப்புகளை மீறியதற்காக டிரம்பின் நிர்வாகம் அவரை கைது செய்து நாடுகடத்த இலக்கு வைத்ததாக கலீலின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.