Page Loader
விமான நிலையத்தில் ஆடைகளை கழற்ற சொல்லி கட்டாயப்படுத்தினர்: திருநர் மாடல் குற்றசாட்டு
இதை வெளியே தைரியமாக சொன்னதற்கு பலர் இவரை பாராட்டியுள்ளனர்.

விமான நிலையத்தில் ஆடைகளை கழற்ற சொல்லி கட்டாயப்படுத்தினர்: திருநர் மாடல் குற்றசாட்டு

எழுதியவர் Sindhuja SM
Mar 03, 2023
02:47 pm

செய்தி முன்னோட்டம்

பாலின இருநிலைக்கு அப்பாற்பட்டவரான(Non-Binary) இந்திய மாடல், வடிவமைப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் நின் கலா, பிப்ரவரி 24 அன்று மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் தனக்கு நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் சென்ற போது, ஒரு அதிகாரி அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்றார் என்றும் அங்கு சோதனைக்காக சட்டையை கழற்ற சொல்லி தகாத முறையில் தொட்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மாடலின் கதை சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும், இதை வெளியே தைரியமாக சொன்னதற்கு பலர் அவரை பாராட்டியுள்ளனர்.

இந்தியா

இன்ஸ்டாகிராம் பதிவில் நின் கலா கூறி இருப்பதாவது:

நான் எனது நண்பர்களோடு சுற்றுலா விசாவில் மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறங்கினேன். எனது நண்பர்கள் இம்மிகிரேஷனை முடித்துக்கொண்டனர். ​​​​ஆனால் அதிகாரிகள் என் மீது சந்தேகம் கொண்டதால், காத்திருக்குமாறு என்னை கேட்டுக்கொண்டனர். இரண்டு அதிகாரிகள் சோதனைக்காக என்னை சட்டையைக் கழற்ற சொன்னார்கள். அதில் ஒருவர் என்னை தகாத முறையில் தொட்டார். அதன் பின், அவர்கள் என்னை நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. என்னை பார்ப்பதற்கு "பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருப்பது போல் தெரியவில்லை" என்று கூறினார்கள். இதெல்லாம் நடக்கும் போது அவர்கள் என்னை பார்த்து பொழுதுபோக்கு போல் சிரித்து கொண்டிருந்தனர். அவர்கள் என்னை ஒரு குற்றவாளியை போல் நடத்தினார்கள். நான் சொல்ல வருவதை அவர்கள் கேட்கவே இல்லை. இது மிகவும் மோசமான மற்றும் அவமானகரமான அனுபவமாக இருந்தது.