LOADING...
அமெரிக்கா -ஈரான் இடையே 60 நாட்களில் இறுதி அமைதி ஒப்பந்தம்: சுவிஸ் மாநாட்டில் எட்டப்பட்ட உடன்படிக்கை
அமெரிக்கா -ஈரான் இடையே 60 நாட்களில் இறுதி அமைதி ஒப்பந்தம்

அமெரிக்கா -ஈரான் இடையே 60 நாட்களில் இறுதி அமைதி ஒப்பந்தம்: சுவிஸ் மாநாட்டில் எட்டப்பட்ட உடன்படிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jun 22, 2026
07:51 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்திய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்' கீழ் சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் நகரில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உயர்மட்ட அமைதி பேச்சுவார்த்தையின் முதற்கட்ட அமர்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. லூசெர்ன் ஏரி பகுதியில் நடைபெற்ற இந்த உச்சி மாநாடு மிகவும் "நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான சூழலில்" நடைபெற்றதாக இரு நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ மத்தியஸ்தர்களாக செயல்பட்டன.

முக்கிய அம்சங்கள்

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) முக்கிய அம்சங்கள் என்ன?

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில், அடுத்தகட்ட தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கும், எடுக்கப்படும் முடிவுகளைக் கண்காணிப்பதற்கும் ஒரு புதிய கூட்டுக் குழுவை உருவாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அடுத்த 60 நாட்களுக்குள் இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு கண்டு, இறுதி அமைதி ஒப்பந்தத்தை எட்ட ஒரு தெளிவான காலக்கெடு வகுக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த சமரசக் குழுவின் செயல்பாடுகளை அரசியல் ரீதியாகக் கண்காணிக்க ஒரு பிரத்யேக உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் கீழ் அணுசக்தி விவகாரங்கள், பொருளாதாரத் தடைகள் நீக்கம், மற்றும் ஒப்பந்த அமலாக்கக் குறைதீர்ப்ப்பு ஆகியவற்றிற்கான தனித்தனி பணிக்குழுக்கள் செயல்படும்.

ஹார்முஸ் ஜலசந்தி

ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு

கடல்வழி போக்குவரத்தில் தவறான புரிதல்களாலோ அல்லது ஆத்திரமூட்டல்களாலோ தேவையற்ற மோதல்கள் ஏற்படுவதை தடுக்க, இரு நாடுகளுக்கும் இடையே உடனடி தகவல் தொடர்பு தடம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சர்வதேச வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். லெபனானில் ராணுவ நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படுவதைக் கண்காணித்து உறுதி செய்ய, மத்தியஸ்த நாடுகளின் உதவியோடு லெபனான் குடியரசையும் உள்ளடக்கிய ஒரு புதிய 'மோதல் தவிர்ப்புப் பிரிவு' உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும் போரைத் தவிர்த்து, ராஜதந்திர ரீதியாகவும், அமைதி வழியிலும் தீர்வுகாண முன்வந்த அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் அர்ப்பணிப்பை கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மத்தியஸ்த நாடுகள் மனதாரப் பாராட்டியுள்ளன.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement