சிலிக்கான் வங்கியின் வைப்புகளும் கடன்களும் முதல் குடிமக்கள் வங்கிக்கு விறக்கப்பட்டது
திங்களன்று(மார் 27), சிலிக்கான் வங்கியின் அனைத்து வைப்புகளையும் கடன்களையும் முதல் குடிமக்கள் வங்கி மற்றும் அறக்கட்டளை நிறுவனத்திற்கு ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (FDIC) விற்றது. முழு வங்கியும் நஷ்டப் பங்கு கவரேஜுடன் சேர்த்து விறக்கப்பட்டுள்ளது. சிலிக்கான் வங்கி, நேஷனல் அசோசியேஷன் ஆகியவற்றில் பணம் இருப்பு வைத்திருந்தவர்கள் தானாகவே முதல் குடிமக்கள் வங்கி மற்றும் அறக்கட்டளை நிறுவனத்தின் வைப்பாளர்களாக மாறுவார்கள். "முதல் குடிமக்கள் வங்கி மற்றும் அறக்கட்டளை நிறுவனத்தால் வாங்கப்பட்ட அனைத்து வைப்புத்தொகைகளும் FDICஆல் வழங்கப்பட்ட காப்பீட்டு வரம்பு வரை தொடர்ந்து காப்பீடு செய்யப்படும்" என்று அந்த அரசு நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
SVB பிரைவேட் மற்றும் சிலிக்கான் வங்கியை தனித்தனியாக விற்க முடிவு செய்த FDIC
முதல் குடிமக்கள் வங்கி, சொத்துக்களில் சுமார் $109 பில்லியனையும் மொத்த வைப்புத்தொகையில் $89.4 பில்லியனையும் வைத்திருக்கிறது. மார்ச் 10, 2023 நிலவரப்படி, SVB, மொத்த சொத்துக்களில் சுமார் $167 பில்லியன் மற்றும் மொத்த வைப்புத்தொகையில் சுமார் $119 பில்லியனைக் கொண்டுள்ளது. முதல் குடிமக்கள் வங்கி, SVBயின் சொத்துகளில் சுமார் $72 பில்லியன்களை $16.5 பில்லியனுக்கு தள்ளுபடியில் வாங்கியுள்ளது. FDIC ஆனது SVBயின் டெபாசிட் இன்சூரன்ஸ் ஃபண்டில்(DIF) ஏற்பட்ட இழப்புகளின் மதிப்பு தோராயமாக $20 பில்லியன் என மதிப்பிட்டுள்ளது. SVB-பிரைவேட்டை சிலிக்கான் வங்கியுடன் சேர்த்து விற்பதற்கு FDIC கடந்த இரண்டு வாரங்களாக முயற்சித்து வந்ததது. ஆனால், அப்படி விற்க முடியவில்லை என்றதும், SVB பிரைவேட் மற்றும் சிலிக்கான் வங்கியை தனித்தனியாக விற்க முடிவு செய்தது.