
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மாலில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பல அடுக்கு வணிக வளாகத்தில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
கராச்சி மேயர் முர்தாசா வஹாப் X இல் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கராச்சி நகரின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ரஷித் மின்ஹாஸ் சாலையில் உள்ள ஆர்.ஜே.மாலில் இன்று காலை 7:00மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்து நேர்ந்த சிறிது நேரத்திலேயே மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன.
"காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது" என்று அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
கராச்சியில் உள்ள மாலில் தீ விபத்து
Unfortunately, fire broke out in a shopping mall on Rashid Minhas Road in Karachi, killing 11 people and burning dozens of shops. #Karachi pic.twitter.com/Y9GomexJiM
— MN TIMES (@mntimes_) November 25, 2023