NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஈராக் நாட்டில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈராக் நாட்டில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக பலி
    ஈராக் நாட்டில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக பலி

    ஈராக் நாட்டில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக பலி

    எழுதியவர் Nivetha P
    Sep 27, 2023
    01:08 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈராக் நாட்டில் நைன்வே மாகாணம், வடக்கு ஈராக் பகுதியான ஹம்தானியா நகரில் திருமணங்கள் அரங்கேறும் மண்டபத்தில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதன்படி நேற்று(செப்.,26) இரவு நடந்த இந்த திருமண நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் அந்த திருமண மண்டபத்தில் எதிர்பாரா விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    அங்கு மீட்பு பணியினர் தொடர்ந்து தங்கள் மீட்பு பணியினை மேற்கொண்ட நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி சுமார் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மேலும், இதில் படுகாயம் அடைந்த 150க்கும் மேற்பட்டோர் அந்த மாகாணத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    பலி

    மண்டபத்தின் உரிமையாளர் உள்பட பலர் மீது கைது நடவடிக்கை - காவல்துறை 

    சிகிச்சை பெற்று வருவோரில் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், திருமணம் நடந்த மண்டபத்தின் சுற்றுச்சுவரானது எளிதில் தீ பிடிக்க கூடிய வகையில் வடிவமைக்க பட்டுள்ளதாகவும், திருமண நிகழ்வில் பட்டாசுகள் வெடித்த காரணத்தினால் தீ பற்றி எரியத்துவங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

    திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவரானது இடிந்து விழுந்த காரணத்தினால் தான் உயிரிழப்பின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து. ஈராக்கில் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு திருமண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்துள்ள காவல்துறை, நிச்சயம் மண்டபத்தின் உரிமையாளர் உள்பட பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருமணங்கள்
    கைது
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    திருமணங்கள்

    விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ குறித்து வெளியான புதிய தகவல் ஓடிடி
    பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்ய போகும் 'தோனி' பட நாயகி கியாரா பாலிவுட்
    மனைவியை இரண்டாவது முறையாக திருமணம் செய்யும் ஹர்திக் பாண்டியா!! கிரிக்கெட்
    ஜப்பானில் பரவிவரும் வார இறுதி திருமணங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உறவுகள்

    கைது

    கோவையில் துப்பாக்கி குண்டுகளுடன் சிக்கிய ராஜஸ்தான் நபர் கைது  ராஜஸ்தான்
    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது  கொலை
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு  நீதிமன்ற காவல்

    காவல்துறை

    சுதந்திர தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் அமைப்புகள் திட்டம்  தீவிரவாதிகள்
    'மதம் மாறு அல்லது பணம் கொடு'; பெங்களூரை அதிர வைத்த பாலியல் தொழில் பெங்களூர்
    மணிப்பூர் வன்முறை - குகி சமூகத்தினை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை  மணிப்பூர்
    பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி

    காவல்துறை

    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் தூத்துக்குடி
    'ஜெய்பீம்' திரைப்பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்  திரைப்படம்
    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்  உத்தரப்பிரதேசம்
    பாஜக எம்பி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உடல்: ஒரு அதிர்ச்சி சம்பவம்  அசாம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025