ஈராக் நாட்டில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக பலி
செய்தி முன்னோட்டம்
ஈராக் நாட்டில் நைன்வே மாகாணம், வடக்கு ஈராக் பகுதியான ஹம்தானியா நகரில் திருமணங்கள் அரங்கேறும் மண்டபத்தில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
அதன்படி நேற்று(செப்.,26) இரவு நடந்த இந்த திருமண நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த திருமண மண்டபத்தில் எதிர்பாரா விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்கு மீட்பு பணியினர் தொடர்ந்து தங்கள் மீட்பு பணியினை மேற்கொண்ட நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி சுமார் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இதில் படுகாயம் அடைந்த 150க்கும் மேற்பட்டோர் அந்த மாகாணத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பலி
மண்டபத்தின் உரிமையாளர் உள்பட பலர் மீது கைது நடவடிக்கை - காவல்துறை
சிகிச்சை பெற்று வருவோரில் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருமணம் நடந்த மண்டபத்தின் சுற்றுச்சுவரானது எளிதில் தீ பிடிக்க கூடிய வகையில் வடிவமைக்க பட்டுள்ளதாகவும், திருமண நிகழ்வில் பட்டாசுகள் வெடித்த காரணத்தினால் தீ பற்றி எரியத்துவங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவரானது இடிந்து விழுந்த காரணத்தினால் தான் உயிரிழப்பின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து. ஈராக்கில் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு திருமண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்துள்ள காவல்துறை, நிச்சயம் மண்டபத்தின் உரிமையாளர் உள்பட பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.