முன்னறிவிப்பின்றி திடீர் பிரிவா? எலான் மஸ்க்குடனான காதல் முறிவு குறித்து நியூராலிங்க் அதிகாரி ஷிவோன் ஜிஹிஸ் ஓபன் டாக்
செய்தி முன்னோட்டம்
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கும், அவரது நியூராலிங்க் நிறுவனத்தின் உயர் அதிகாரியுமான ஷிவோன் ஜிஹிஸும் பிரிந்துவிட்டனர். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இவர்களது காதல் உறவு தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென இந்த முறிவு ஏற்பட்டுள்ளதாக ஷிவோன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இத்தகவலை அவர் வெளியிட்டது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உருக்கமான பதிவு
திடீர் பிரிவு குறித்து ஷிவோன் வெளியிட்ட உருக்கமான பதிவு
தங்களது திடீர் காதல் பிரிவு குறித்து ஷிவோன் ஜிஹிஸ் மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார்.
ஒரே வாரத்தில் காதலிலிருந்து பிரிவுக்கு மாறுவது மிகவும் கடினம் என அவர் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் வாழ்வில் தான் ஒரு அமைதியான பாதுகாப்பான சூழலை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கடினமான காலங்களில் அவருக்கு ஆதரவாக இருந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைவதாகக் கூறியுள்ளார்.
பிரிவு ஏற்பட்ட போதிலும் தங்களது நான்கு குழந்தைகளுக்காக இணைந்து செயல்பட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இனிவரும் நாட்களில் இருவரும் நல்ல நண்பர்களாகத் தொடர விரும்புவதாகவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள்
நான்கு குழந்தைகள் மற்றும் மெசேஜ் ஆதாரம்
இத்தம்பதியருக்கு மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் 2021 முதல் 2025 வரை பிறந்த குழந்தைகள் ஆவர்.
குழந்தைகள் அனைவரும் தங்களின் பார்வையில் பாதுகாப்பாக வளருவார்கள் எனச் ஷிவோன் கூறியுள்ளார்.
தங்களுக்குள் நடந்த கடைசி குறுஞ்செய்தியின் புகைப்படத்தையும் அவர் ஆதாரமாகப் பகிர்ந்துள்ளார்.
செப்டம்பர் 24 அன்று இருவரும் அன்பைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். ஆனால் அதற்கு அடுத்த சில நாட்களிலேயே இந்த எதிர்பாராத பிரிவு ஏற்பட்டுள்ளது.
இந்தத் திடீர் முடிவு உலகளவில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
It’s hard to go from in love to let go in a week with no warning, but that’s just how it is sometimes 🤷🏻♀️
— Shivon Zilis (@shivon) October 2, 2026
I feel happy that I got to show Elon how it feels to be deeply understood, nurtured, and peacefully loved with stability and gentleness. Given the tumultuous nature of his… https://t.co/HAOfjxrIig pic.twitter.com/lgL0GVzD2R
பின்னணி
யார் இந்த ஷிவோன் ஜிஹிஸ்?
ஷிவோன் ஜிஹிஸ் கனடா நாட்டை சேர்ந்த ஒரு தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். இவர் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளியல் மற்றும் தத்துவவியலில் படித்துப் பட்டம் பெற்றவர்.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் இவர் பெரும் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.
ஓபன்ஏஐ மற்றும் டெஸ்லா ஆகிய முன்னணி நிறுவனங்களில் இவர் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
தற்போது எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனத்தின் சிறப்புத் திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
தொழில்நுட்ப உலகில் இவர் ஒரு முக்கிய நிர்வாகியாகக் கருதப்படுகிறார்.