டிரம்பின் 2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரும் நன்கொடையை வழங்கினார் எலான் மஸ்க்
செய்தி முன்னோட்டம்
2024 அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை ஆதரிக்கும் வகையில் எலான் மஸ்க் டிரம்பின் பிரச்சாரத்திற்கு பெரும் நன்கொடையை அளித்துள்ளார்.
டிரம்பை ஆதரிக்கும் சூப்பர் அரசியல் நடவடிக்கைக் குழுவான அமெரிக்கா பிஏசிக்கு (பிஏசி) அவர் இந்த நன்கொடையை வழங்கியுள்ளார்.
அவர் சரியாக எவ்வளவு தொகை கொடுத்தார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
ஆனால் இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள், அவர் ஒரு பெரிய தொகையை வழங்கினார் என்று கூறியுள்ளனர்.
இது அமெரிக்க அரசியலில் எலான் மஸ்க்கின் முக்கிய நுழைவைக் குறிக்கிறது.
இது அவரது வளர்ந்து வரும் செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஜூலை 15க்குள் நன்கொடையாளர்களின் பட்டியலை பிஏசி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா
ஜனநாயக கட்சியை கடுமையாக பாதிக்க இருக்கும் எலான் மஸ்க்கின் நன்கொடை
தன்னை அரசியல் சார்பற்றவர் என்று முன்பு கூறிக்கொண்ட எலான் மஸ்க், சமீபகாலமாக சமூக வாலித்தளங்களை பயன்படுத்தி வலதுசாரி கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
அவர் தான் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பேன் என்பதை வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், அவர் தபோது டொனால்ட் டிரம்புக்கு நன்கொடை வழங்கி இருப்பது, அவர் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பதை தெளிவாக காட்டுகிறது.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் உரிமையாளரான தற்போதைய அமெரிக்க அதிபரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஜோ பைடனை சமீபத்தில் பகிரங்கமாக விமர்சித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க்கின் இந்த ஆதரவு ஜனநாயக கட்சியை கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.