பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் சீனா: உள்குத்து இருக்குமோ என்று கவலைப்படும் அமெரிக்கா
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கைக்கு சீனா கடன் வழங்கிவருவது கவலை அளிக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. "இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு சீனா கடன் வழங்கி வருகிறது. இவை வலுக்கட்டாயமான அந்நியச் செலாவணிக்கு பயன்படுத்தப்படலாம் என்பதால் அது எங்களுக்கு கவலை அளிக்கிறது." என்று தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி செயலாளர் டொனால்ட் லு கூறியுள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் விரைவில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் இந்த கருத்தை டொனால்ட் லு செய்தியாளர்களிடம் கூறி இருக்கிறார். உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் மார்ச் 1 முதல் 3 வரை மூன்று நாள் பயணமாக புது டெல்லி வருகிறார்கள்.
சீன பிரச்சனையை பற்றி விவாதித்த இந்தியா மாற்று அமெரிக்கா
"நாங்கள் இந்தியா மற்றும் அந்த பகுதியில் உள்ள நாடுகளிடம் பேசி வருகிறோம். சீனா உட்பட யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் தங்களது சொந்த முடிவை எடுக்க அந்த நாடுகளுக்கு நாங்கள் உதவுகிறோம்." என்று டொனால்ட் லு தெரிவித்திருக்கிறார். சமீபத்தில், சீன மேம்பாட்டு வங்கியின் வாரியம்(சிடிபி) பாகிஸ்தானுக்கு $700 மில்லியன் கடன் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் டார் அறிவித்தார். ஒரு கேள்விக்கு பதிலளித்த டொனால்ட் லூ, சீனாவின் பிரச்சினையை பற்றி இந்தியாவும் அமெரிக்காவும் தீவிர உரையாடல் நடத்தியதாக கூறியுள்ளார். "சீனாவின் கண்காணிப்பு பலூன் தொடர்பான சமீபத்திய பிரச்சனைக்கு முன்பு நாங்கள் இது பற்றி தீவிரமாக விவாதித்துள்ளோம். எனவே, அந்த உரையாடல்கள் தொடரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்." என்று மேலும் அவர் கூறியுள்ளார்.