
புத்த மதத்தை அழிக்க சீனா முயற்சி: தலாய் லாமா குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
புத்த மதத்தை அழிக்க சீன அரசு முயற்சிப்பதாக புத்த மத தலைவர் தலாய் லாமா குற்றம் சாட்டியுள்ளார்.
தலாய் லாமா திபெத்தை சேர்ந்தவர். 1949ஆம் ஆண்டு சீன நாடு திபெத்தை கைப்பற்றியது.
இதனால், 1959ஆம் ஆண்டு திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா அவரது ஆதரவாளர்களுடன் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
அன்றிலிருந்து இன்று வரை இமாச்சல் தர்மசாலாவில் தான் இவர் வாழ்ந்து வருகிறார்.
ஒவ்வொரு வருடமும் ஆன்மிக யாத்திரையாக பிஹாரின் புத்த கயாவுக்கு செல்வது இவரது வழக்கம்.
அதற்காக நேற்று முன்தினம்(டிச:31) புத்த கயாவுக்கு சென்ற இவர், சீன அரசு புத்த மதத்தை அழிக்க முயற்சிப்பதாக கூறி இருக்கிறார்.
தலாய் லாமா
தலாய் லாமா பேசியதாவது:
இமாலய மலைப்பிரதேசங்களில் புத்த மதம் செழிப்பாக பரவி இருக்கிறது. சீனாவிலும் மங்கோலியாவிலும் புத்த மதத்தை போற்றுகின்றனர்.
ஆனால், சீன அரசு புத்த மதத்தை அழிக்க முயற்சிக்கிறது. அந்த கம்யூனிஸ்ட் அரசு புத்த மதத்தை விஷமாக கருதுகிறது.
சீனாவிலும் திபெத்திலும் பல புத்த கோவில்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், என்ன செய்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
புத்த மதத்தை சீன மக்கள் உறுதியுடன் பின்பற்றுகின்றனர். இன்றும், புத்தம் அங்கு வலுவாக இருக்கிறது.
சமீப காலமாக, திபெத்தின் புத்த மதத்தை உலகமே திரும்பி பார்க்க தொடங்கியுள்ளது. சீனாவிலும் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வேண்டும், என்று கூறி இருக்கிறார்.