LOADING...
5 நிமிடம் கட்டிப்பிடிக்க ரூ.600 கட்டணம் செலுத்தும் பெண்கள்; சீனாவில் வளர்ந்து வரும் 'ஆண் அம்மா' கலாச்சாரம்
5 நிமிடம் கட்டிப்பிடிக்க ரூ.600 கட்டணம் செலுத்தும் சீனப் பெண்கள்

5 நிமிடம் கட்டிப்பிடிக்க ரூ.600 கட்டணம் செலுத்தும் பெண்கள்; சீனாவில் வளர்ந்து வரும் 'ஆண் அம்மா' கலாச்சாரம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 08, 2025
02:10 pm

செய்தி முன்னோட்டம்

சீனா முழுவதும் 'ஆண் அம்மாக்கள்' என்று பிரபலமாக அழைக்கப்படும் ஆண்களின் அரவணைப்புகளுக்கு பெண்கள் பணம் செலுத்தும் முறை பிரபலமாகி வருகிறது. ஐந்து நிமிடம் கட்டிப்பிடித்து அரவணைக்கும் இந்த கட்டிப்பிடி வைத்தியத்திற்கு பொதுவாக சுமார் 50 யுவான் (தோராயமாக ரூ.600) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த ஐந்து நிமிட அரவணைப்புகள் அரட்டை செயலிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு ஷாப்பிங் மால்கள் மற்றும் சுரங்கப்பாதை நிலையங்கள் போன்ற பொது இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. 'ஆண் அம்மாக்கள்' என்ற சொல் முதலில் வலிமையான ஆண்களை குறிப்பிட்டாலும், தற்போது இது கருணை, பொறுமை மற்றும் உணர்ச்சி உணர்திறன் போன்ற வளர்க்கும் பண்புகளுடன் உடல் வலிமையை இணைக்கும் நபர்களைக் குறிக்க உருவாகியுள்ளது.

கட்டிப்பிடி வைத்தியம்

பெண்கள் கட்டிப்பிடி வைத்தியத்தை விரும்புவது ஏன்?

இந்த கட்டிப்பிடி வைத்தியத்தை விரும்பும் பெண்கள், கட்டிப்பிடிப்பதன் மூலம், தங்களை பாதுகாப்பாகவும், மரியாதையாகவும் உணர்வதோடு, உணர்ச்சி ரீதியாகவும் நன்மை பயப்பதாக தெரிவிக்கின்றனர். இதில் பங்கேற்கும் பெண்கள் பெரும்பாலும் ஆளுமை மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் தங்கள் ஆண் அம்மாக்களைத் தேர்வு செய்கிறார்கள், இது ஆறுதல் உணர்வை உறுதி செய்கிறது. இது தொடர்பான ஊடக அறிக்கைகளில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு மாணவி, ஆய்வறிக்கை தொடர்பான மன அழுத்தத்தைப் போக்க இந்த அரவணைப்பை நாடியதாகக் கூறினார். மேலும் அத்தகைய அரவணைப்புகள் பள்ளி நாட்களுடன் தொடர்புடைய பாதுகாப்பு உணர்வை மீண்டும் கொண்டு வந்ததாகவும் கூறினார்.

ஆண் அம்மாக்கள்

ஆண் அம்மாக்கள் சொல்வது என்ன?

இந்த அணைப்புகளை வழங்கும் ஆண்கள், இந்த அனுபவத்தால் திருப்தி அடைந்ததாக உணர்கிறார்கள் என்றும், கட்டணம் வசூலிப்பது தொழில்முறை எல்லைகளைப் பராமரிக்க உதவுகிறது என்றும் கூறுகிறார்கள். இந்த கட்டிப்பிடி வைத்திய சேவையைக் கொடுக்கும் ஒரு ஆண் அம்மா உறுப்பினர், 34 அணைப்புகளை வழங்கியதாகவும், 1,700 யுவானுக்கு மேல் சம்பாதித்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் அவரது சேவை பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், ஜட்ஜ்மென்ட் இன்றி வெளிப்படுத்தவும் உதவியது என்றும் கூறினார். பெண்கள் உணர்ச்சி இணைப்பிற்கான மாற்று ஆதாரங்களைத் தேடும்போது, ஆண் அம்மாக்கள் அதிகரிப்பு, மன நலம் பற்றிய வளர்ந்து வரும் விழிப்புணர்வையும் நவீன நகர்ப்புற வாழ்க்கையில் மனித இணைப்பின் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.