
ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை
செய்தி முன்னோட்டம்
இலங்கையின் முன்னாள் அதிபர்கள் கோத்தபய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட நான்கு அதிகாரிகளுக்கு கனடா தடைகளை விதித்துள்ளது.
1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் மனித உரிமை மீறல்களை அரங்கேற்றியதால் இந்த தடைகள் விதிக்கப்ட்டுள்ளதாக கனடா பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இந்த தடைகளின் படி, இலங்கையை சேர்ந்த நான்கு பேருக்கு கனடா நாட்டிற்குள் வருவதற்கு அனுமதி கிடையாது.
ராஜபக்சே சகோதரர்களுடன் இலங்கை ராணுவ அதிகாரி சுனில் ரத்னாயகே, கடற்படை கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சி ஆகியோருக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது போக, இவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் கனடாவில் இருந்தால் அது பறிமுதல் செய்யப்படும் என்றும் கனடா அறிவித்திருக்கிறது.
11 Jan 2023
தமிழீழ படுகொலை
1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை தமிழீழ படுகொலை மிக சாதாரணமாக இலங்கையில் நடந்து கொண்டிருந்தது.
இந்த இனப் படுகொலையின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் உட்பட கடந்த 40 வருடங்களில் நடந்த ராணுவம், அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளை எதிர்த்து கனடா இந்த தடைகளை அறிவித்திருக்கிறது.
அமைதிக்கான பாதையில் இலங்கை பயணிப்பதற்கு கனடா எப்போதும் ஆதரவு அளிக்கும் என்றும் கனடா அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு நிவாரண நிதியாக 3 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் கனடா வழங்க இருப்பதாக கூறி இருக்கிறது.