LOADING...
சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் அச்சமின்றி புடின் இந்தியா வரக் காரணம் என்ன?
ரஷ்ய அதிபர் புடின் இன்று மாலை இந்தியா வரவுள்ளார்

சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் அச்சமின்றி புடின் இந்தியா வரக் காரணம் என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Dec 04, 2025
02:09 pm

செய்தி முன்னோட்டம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பிடிவாரண்ட் குறித்த எந்தவித அச்சமும் இன்றி இந்தியாவிற்கு வருகை தர முடியும். இதற்கு காரணம், இந்தியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவிய 'ரோம் ஒப்பந்தத்தில்' (Rome Statute) கையெழுத்திடாத நாடு என்பதேயாகும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பு நாடாக இந்தியா இல்லாததால், நீதிமன்றத்தின் உத்தரவுகளையோ அல்லது புடின் மீதான பிடிவாரண்டையோ நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டபூர்வமான கடமை இந்தியாவிற்கு இல்லை. அதிபர் புடின் உக்ரைனில் இருந்து குழந்தைகளை சட்டவிரோதமாக கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டி, மார்ச் 2023-இல் ஐ.சி.சி அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற முக்கிய நாடுகள் ஐ.சி.சி-யில் உறுப்பினர்களாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி நிரல்

புடினின் 24 மணி நேர நிகழ்ச்சி நிரல்

ரஷ்ய அதிபரை வரவேற்க டெல்லி விமான நிலையத்தில் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு ஒரு தனிப்பட்ட இரவு விருந்தை வழங்குவார். கடந்த ஆண்டு பிரதமர் மாஸ்கோவிற்கு விஜயம் செய்தபோது புடின் மோடிக்கு இரவு விருந்து அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடிக்கும் புடினுக்கும் இடையிலான வருடாந்திர இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு டிசம்பர் 5 வெள்ளிக்கிழமை நடைபெறும். உக்ரைன் படையெடுப்பிற்கு பிறகு புடினின் முதல் இந்திய வருகை இதுவாகும். பேச்சுவார்த்தைக்கு முன் ரஷ்ய ஜனாதிபதிக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடைபெறும் இடமான ஹைதராபாத் மாளிகையில் புடின் மற்றும் அவரது குழுவினருக்கு பிரதமர் மோடி மதிய உணவு விருந்தை வழங்குவார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement