NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சந்திர புத்தாண்டு விழாவில் மக்களை சரமாரியாக சுட்டவர் தற்கொலை
    உலகம்

    சந்திர புத்தாண்டு விழாவில் மக்களை சரமாரியாக சுட்டவர் தற்கொலை

    சந்திர புத்தாண்டு விழாவில் மக்களை சரமாரியாக சுட்டவர் தற்கொலை
    எழுதியவர் Sindhuja SM
    Jan 23, 2023, 11:48 am 0 நிமிட வாசிப்பு
    சந்திர புத்தாண்டு விழாவில் மக்களை சரமாரியாக சுட்டவர் தற்கொலை
    சந்தேக நபர் போலீஸார் சுற்றிவளைத்ததால் தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

    கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட நபர் உயிரிழந்தார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பார்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையின் கேப்டன் ஆண்ட்ரூ மேயர் நேற்று(ஜன:22) தெரிவித்திருந்தார். சனிக்கிழமை இரவு 10 மணியளவில் உள்ளூர் நடன ஸ்டுடியோவில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் மான்டேரி பார்க் சந்திர புத்தாண்டு விழா நடைபெறும் டவுன்டவுன் பகுதிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த மிகப்பெரிய நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

    தற்கொலை செய்துகொண்ட குற்றவாளி

    திடீரென்று அந்த இடத்துக்குள் புகுந்த மர்ம நபர் புத்தாண்டு விழாவில் கலந்து கொண்ட மக்களை சரமாரியாக சுட ஆரம்பித்தார். இதில் 10 பேர் உயிரிழந்தனர். சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகி இருப்பதாக நேற்று கூறப்பட்டது. இவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், போலீஸார் தேடிவந்த ஹூ கேன் டிரான்(72) என்ற நபர், டோரன்ஸ் நகரில் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட பின்னர் வெள்ளை வேனில் இறந்து கிடந்தார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது உடலில் தன்னைதானே சுட்டு கொண்ட காயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் அமெரிக்க தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடும்படி அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருக்கிறார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    அமெரிக்கா

    சமீபத்திய

    தளபதி படத்தின் ப்ரிமியருக்கு வரவேற்று, ரஜினி கைப்பட எழுதிய லெட்டர்; இணையத்தில் வைரல் ரஜினிகாந்த்
    குழந்தை பாலியல் சுரண்டல் - மார்க் ஜூக்கர்பெர்க் மீது குற்றச்சாட்டு! மெட்டா
    பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு இந்தியா
    உலக தண்ணீர் தினம் : வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கினார் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    உலகம்

    இந்திய பாஸ்போர்ட் மட்டும் போதும், இந்த நாடுகளுக்கு விசா இல்லாமலே பயணிக்கலாம்! சுற்றுலா
    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி பாகிஸ்தான்
    இன்று சர்வதேச தண்ணீர் தினம்: நிலையான நீர் மேலாண்மைக்கான வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம் ஐக்கிய இராச்சியம்
    912 வாரங்களுக்கு பிறகு டென்னிஸ் தரவரிசையில் பின்தங்கிய ரஃபேல் நடால் விளையாட்டு

    அமெரிக்கா

    காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் இந்தியா
    கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல் உலகம்
    சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியா
    பணிநீக்கம் செய்த நிறுவனங்களை கதறவிட்ட முன்னாள் ஊழியர்கள்! புதிய வளர்ச்சி தொழில்நுட்பம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023