LOADING...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப்பிற்கு பின்னடைவு: ஈரான் மீதான போர் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப்பிற்கு பின்னடைவு

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப்பிற்கு பின்னடைவு: ஈரான் மீதான போர் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 24, 2026
09:48 am

செய்தி முன்னோட்டம்

ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி மேற்கொள்வதை கட்டுப்படுத்தும் முக்கிய போர் அதிகாரத் தீர்மானம், அந்நாட்டின் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த சொந்தக் கட்சியின் எம்பிக்களை "தோல்வியடைந்தவர்கள்" என்றும் விமர்சித்துள்ளார். இந்த தீர்மானம் நிறைவேறியதை தொடர்ந்து, தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், "ஈரான் தற்பொழுது முற்றிலும் பலவீனமடைந்து, அமெரிக்காவிற்கும் அதன் அதிபரான எனக்கும் கட்டுப்பட்டு, கேட்கும் சலுகைகளை வழங்கத் தயாராக இருக்கும் வேளையில், செனட் சபை இந்த தேவையற்ற போர்க் கால அதிகாரத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது" என்று சாடியுள்ளார்.

எதிர்வினை

டிரம்ப்பின் எதிர்வினை

இந்த தீர்மானம் தனது பேச்சுவார்த்தை நிலையை பலவீனப்படுத்துவதோடு, எதிரிகளுக்கு "உதவியும் ஆறுதலும்" அளிப்பது போல் உள்ளது என்றும், தனது பணியை அவர்கள் கடினமாக்கியுள்ள போதிலும், தான் எப்போதும் போல இதனை வெற்றிகரமாக முடிப்பேன் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும்பான்மையாக உள்ள செனட் சபையிலேயே இந்தத் தீர்மானம் 50-48 என்ற வாக்குகள் கணக்கில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் ஏற்கனவே பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேற்றப்பட்டிருந்ததால், 1973-ஆம் ஆண்டின் போர்க் கால அதிகாரச் சட்டத்திற்குப் பிறகு, அதிபரின் போர் தொடுக்கும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த இரு அவைகளும் இணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது இதுவே முதல் முறையாகும்.

கருத்து

கட்சிப் பிரிவினையும் மக்கள் கருத்தும்

இந்தத் தீர்மானத்தின் போது டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 4 முக்கிய செனட்டர்கள் டிரம்ப்பிற்கு எதிராக, டெமாக்ரடிக் கட்சியினருடன் இணைந்து வாக்களித்தனர். இருப்பினும், தற்பொழுது ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்து வரும் சூழலில், இந்தத் தீர்மானம் அதிபருக்குப் பெரும் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும், தூதரக முயற்சிகள் தோல்வியடைந்தால் மீண்டும் போர் நடவடிக்கைகளைத் தொடங்குவதைக் கடினமாக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அமெரிக்க மக்களிடையே நடத்தப்பட்ட சமீபத்திய கருத்துக்கணிப்பில், நான்கில் ஒரு அமெரிக்கர் மட்டுமே ஈரானுக்கு எதிரான போர் அதற்குரிய பலனைத் தந்துள்ளதாக நம்புகின்றனர். பெரும்பான்மையான மக்கள் ஈரானுடனான தற்போதைய தற்காலிக அமைதி நீடிக்கும் என்பதில் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

Advertisement