இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரைக்கு இந்த வாரம் பயணிக்கிறார் ஆண்டனி பிளிங்கன்
இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரைக்கு, இந்த வாரம் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பயணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் தொடங்கியதற்கு பின்னர், இது பிளிங்கனின் மூன்றாவது இஸ்ரேல் பயணமாகும். தற்போது பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு நேட்டோ கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள பிளிங்கன், அங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கிறார். பிளிங்கன் தனது பயணத்தில் காசாவிற்குள் செல்லும் நிவாரண உதவிகளை அதிகரிக்கவும், அனைத்து பணய கைதிகளை விடுவிக்கப்படுவதற்கும், காசாவில் அப்பாவி மக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும் பேசுகிறார். மேலும், காசாவின் எதிர்காலம் மற்றும் ஒரு சுதந்திர பாலஸ்தீனிய அரசை நிறுவ வேண்டியதன் அவசியத்தை குறித்து, அவர் டோக்கியோவில் வகுத்த கொள்கைகளை குறித்து மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.