Page Loader
ஜோ பைடன் மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட ரகசிய ஆவணங்களால் பரபரப்பு
அரசாங்க ஆவணங்கள் என் பழைய மாளிகையில் கிடைத்திருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது: ஜோ பைடன்

ஜோ பைடன் மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட ரகசிய ஆவணங்களால் பரபரப்பு

எழுதியவர் Sindhuja SM
Jan 11, 2023
11:11 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மாளிகையில் கண்டெக்கப்பட்ட ரகசிய ஆவணங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜோ பைடன் துணை அதிபராக இருந்த காலத்தில் 'பென் பைடன் மையம்' என்ற அலுவலகத்தைப் பயன்படுத்தி வந்தார். தற்போது, அந்த மாளிகையில் இருந்து 10 முக்கிய ஆவணங்களை அதிபரது வழக்கறிஞர்கள் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட ஆவணங்கள் தற்போது ஆவணங்கள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் ஜோ பைடன் துணை அதிபராக இருந்த போது வெளியே எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் பதிவிக்காலம் முடியும் போது, ஆவணங்கள் அனைத்தையும் ஆவணங்கள் காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஆனால், இந்த 10 ஆவணங்களும் திரும்பி ஒப்படைக்கப்படாததால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

ஆவணங்கள்

மீட்கப்பட்டது ரகசிய ஆவணங்களா?

மீட்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த ஆவணங்களைத் தற்போது அமெரிக்கச் சட்டத்துறை ஆய்வு செய்து வருவதாக வெள்ளை மாளிகைத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரகசிய ஆவணங்கள் கடந்த நவம்பர் மாதமே கண்டறியப்பட்டதாகவும் இதற்கான விசாரணை மிக தாமதப்படுத்த பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் ஒரு பேச்சு அடிபடுகிறது. அரசு ஆவணங்கள் எதற்காக பைடனின் தனி அலுவலகத்திற்கு சென்றது என்ற விமர்சனைகளும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதன் முதல் கட்ட விசாரணையை FBI தொடங்கி இருப்பதாக வெள்ளை மாளிகைத் தெரிவித்துள்ளது. மேலும், அப்படிப்பட்ட ஆவணங்கள் தன் மாளிகையில் இருப்பதே தனக்கு தெரியாது என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.