LOADING...
அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட BBC! எனினும் ₹8000 கோடி இழப்பீடு தர மறுப்பு! 
டிரம்ப் கோரிய ஒரு பில்லியன் டாலர் இழப்பீட்டை வழங்க BBC மறுத்துள்ளது

அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட BBC! எனினும் ₹8000 கோடி இழப்பீடு தர மறுப்பு! 

எழுதியவர் Venkatalakshmi V
Nov 14, 2025
07:55 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஜனவரி 6, 2021 உரையை திருத்தி ஒளிபரப்பிய விவகாரம் தொடர்பாக, பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம் (BBC) அவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. இருப்பினும், டிரம்ப் கோரிய ஒரு பில்லியன் டாலர் (சுமார் ₹8,300 கோடி) இழப்பீட்டை வழங்க அது மறுத்துள்ளது. பிபிசியின் 'பனோரமா' ஆவணப்படத்தில், டிரம்ப்பின் உரையின் சில பகுதிகள் வேண்டுமென்றே திருத்தப்பட்டு, அவர் வன்முறையைத் தூண்டுவதாக தவறுதலாக ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது. உண்மையில் 50 நிமிட இடைவெளியில் பேசப்பட்ட இரண்டு வெவ்வேறு வாக்கியங்களை, ஆவணப்படம் தொடர்ச்சியாக இணைத்துக் காட்டியதே இந்தச் சர்ச்சைக்குக் காரணம்.

நிலைப்பாடு

பிபிசியின் நிலைப்பாடு

இது குறித்து பிபிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தத் திருத்தத்தால் ஏற்பட்ட தவறான புரிதலுக்காக மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்" என்று கூறியுள்ளது. இருப்பினும், அவதூறு வழக்குக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும், இழப்பீடு வழங்க மறுப்பதாகவும் பிபிசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பிபிசி தலைவர் சமீர் ஷா, அதிபர் டிரம்ப்புக்குத் தனிப்பட்ட கடிதம் மூலமாகவும் மன்னிப்பு கோரியுள்ளார். இந்தத் திருத்தல் விவகாரத்தின் எதிரொலியாக, பிபிசியின் தலைமை இயக்குநர் டிம் டேவி மற்றும் செய்திப் பிரிவின் தலைவர் டெபோரா டர்னெஸ் ஆகியோர் ஏற்கெனவே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.